• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

டெல்லி தேர்தல் வெற்றி.. வாழ்த்தி பிரதமர் மோடி போட்ட டுவிட் .. கெஜ்ரிவால் அளித்த பதில்

Google Oneindia Tamil News

டெல்லி சட்டசபை தேர்தலில் வென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை, பிரதமர் மோடி வாழ்த்தி உள்ளார். டெல்லி மக்களின் விருப்பங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய வாழ்த்துகள் என்று கூறினார். அதற்கு நன்றி தெரிவித்த கெஜ்வால், உங்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று பதில் அளித்தார்-

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வென்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக டெல்லி முதல்வராகிறார்.

PM Modi wishes Kejriwal on poll victory but He seeks cooperation

டெல்லி சட்டபை தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுககு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், டெல்லி சட்டசபை தேர்தலில் வென்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள். டெல்லி மக்களின் டெல்லி மக்களின் விருப்பங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், மிக்க நன்றி சார். எங்கள் தலைநகரத்தை உண்மையான உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கு நெருக்கமான விரிவாக பணியாற்ற மத்திய அரசின் ஒத்துழைப்பு வேண்டும் என வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

English summary
Fulfil people's aspirations, PM Modi wishes Kejriwal on delhi poll victory but He seeks cooperation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X