டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிஜமாவா சொல்றீங்க.. மிலிந்த் சோமன் வயசை கேட்டு மிரண்ட மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை ஒருவர் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளார்.. அவர் வேறு யாருமில்ல முன்னாள் மாடல் அழகன் மிலிந்த் சோமன்தான். அவரது வயதைக் கேட்டுத்தான் ஆச்சரியமாகி விட்டாராம் பிரதமர் மோடி.

பல்வேறு பிரபலங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் அளவளாவினார். அதன்படி கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, நடிகர் மாடல் மிலிந்த் சோமன் ஆகியோருடனும் அவர் பேசினார். பிட் இந்தியா என்ற பெயரில் இந்த பேச்சை மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

 PM Modi wonders after knowing the age of Milind Soman

மிலிந்த் சோமனுடன் பிரதமர் பேசியதுதான் ரொம்ப சுவாரசியமானது. காரணம், சோமன் வயதை கேட்டதும் ஆச்சரியமடைந்து விட்டாராம் பிரதமர் மோடி. "என்னங்க சொல்றீங்க. உண்மையிலேயே அவ்வளவு வயதா உங்களுக்கு" என்று மோடி ஆச்சரியமாக கேட்டாராம். உண்மையில் சோமனைப் பார்த்தால் யாருமே அவருக்கு 55 வயது என்று சொல்ல மாட்டார்கள். அத்தனை ஃபிட்டாக இருப்பார்.

அவரை விட அவரது தாயார்தான் மிக மிக ஆச்சரியப்படுத்தக் கூடியவர். அவரும், மகனுமாக இணைந்து பல்வேறு கடினமான உடற்பயிற்சிகளை செய்து அந்த வீடியோக்கள் ரொம்பப் பிரபலமானது. அதைப் பார்த்துதான் சோமனுடன் பேசியுள்ளார் பிரதமர் மோடி. இதுகுறித்து சோமன் கூறுகையில், "உங்க வயது என்ன வேணா இருக்கட்டும். ஆனால் உண்மையிலேயே உங்களுக்கு அத்தனை வயதாகி விட்டதா" என்று ஆச்சரியமாக கேட்டாராம் பிரதமர்.

வெள்ளிக்கிழமை விடிகாலை.. கோலம் வந்த போட வந்த சித்ரா.. பதற வைத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!வெள்ளிக்கிழமை விடிகாலை.. கோலம் வந்த போட வந்த சித்ரா.. பதற வைத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

அதற்கு சோமன் பதிலளிக்கையில், "என்னிடம் பலரும் உங்களுக்கு 55 வயதா என்றுதான் கேட்கிறார்கள். நான் இந்த வயதில் கூட 500 கிலோமீட்டர் ஓட்டத்தில் ஓடுவதைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறர்கள். எனது தாயாருக்கு வயது 81 ஆகிறது. அவரைப் போல நானும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு எனது தாயார்தான் உத்வேகம் தருபவர்" என்று பிரதமரிடம் கூறினாராம் மிலிந்த் சோமன்.

மேலும் மிலிந்த் சோமனின் தாயார் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை 5 முறை பார்த்து வியந்து போய் விட்டாராம் மோடி. இதையும் அவரே சோமனிடம் சொல்லி ஆச்சரியப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சோமன் கூறுகையில், "கிராமங்களில் நிறைய நடக்கிறார்கள், ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். நகரங்களில்தான் அனைவருமே தேங்கிப் போய் விட்டோம். உடல் உழைப்புக்கு இங்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதனால்தான் பிட்னஸ் குறைந்து போய் விடுகிறது. ஒரு மனிதன் 100 கிலோமீட்டர் நடந்தாலே பெரிய ஆச்சரியம்தான்" என்று கூறுகிறார் மிலிந்த் சோமன்.

"நமது உடம்பை பிட்டாக வைத்திருக்க ஜிம் மற்றும் மெஷின் எல்லாம் தேவையில்லை. நிறைய உடல் உழைப்பு இருந்தால் போதுமானது. மன பலம்தான் இங்கு முக்கியம். அது இருந்தால் நாம் நலமாக இருக்க முடியும்" என்றார் மிலிந்த் சோமன்.

English summary
PM Modi wonders after knowing the age of Milind Soman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X