• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெருஸ்ஸா எதிர்பார்த்து பயந்து ஏமாந்து போன மக்கள்.. கொஞ்ச நேரத்துக்கு நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த மோடி

|
  மிஷன் சக்தி சோதனை வெற்றி.. மோடி அதிரடி அறிவிப்பு-வீடியோ

  டெல்லி: இன்று நாடே கொஞ்ச நேரத்துக்கு பரபரப்பாகிவிட்டது. மக்கள் மத்தியில் ஒரு பதட்டம், ஒரு பீதி, ஒரு பயம், ஒரு குழப்பம் என எல்லா உணர்வுகளும் சேர்ந்து கொண்டன! இதற்கு காரணம் பிரதமர் மோடியின் அந்த அறிவிப்பு தான்!

  பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளதாக கூறி ஒரு பதிவினை போட்டிருந்தார். கூடவே "முக்கிய செய்தி" இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதுதான் எல்லாவற்றிற்கும் காரணமாக போய்விட்டது!

  மோடி என்ன சொல்லப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு கலந்த பயம் தொத்திக் கொள்ள ஆரம்பித்தது. ஏனெனில் இதேபோலதான் அன்று பணமதிப்பு இழப்பு அறிவிப்பினை வெளியிட்டார்.

  விண்வெளித்துறையில் இந்தியா மாபெரும் சாதனை.. அது என்ன மிஷன் சக்தி? ஏன் நாட்டுக்கு முக்கியம்?

  பறிபோன உயிர்கள்

  பறிபோன உயிர்கள்

  கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் அலையவைத்தது எல்லாம் இன்று கண்முன் நிழலாட ஆரம்பித்துவிட்டது. சோறு தண்ணி இல்லாமல் ஏடிஎம் வாசலில் மயங்கி விழுந்த உயிர்களை பற்றின சிந்தனையும் வந்து போனது.

  பிரச்சாரம்

  பிரச்சாரம்

  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு... பிரச்சாரம் போய்க்கிட்டு இருக்கு... இந்த நேரத்தில என்ன அறிவிப்பா இருக்கும் என்று எல்லோருமே மண்டையை பிய்த்து கொண்டனர். மக்கள் உண்மையிலேயே பயந்து போய் விட்டனர்.

  என்னவா இருக்கும்?

  என்னவா இருக்கும்?

  ஒருவேளை திரும்பவும் பணமதிப்பு இழப்பு விவகாரமா? அல்லது தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட முக்கியமான அறிவிப்பா? அல்லது அணுகுண்டு சம்பந்தமான பகீர் சமாச்சாரமாக இருக்குமோ.. அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று தெரியலையே என்று உள்ளுக்குள் மக்களுக்கு உதறல் ஏற்பட்டது. தேர்தல் விதிமுறைகளும் அமலில் உள்ளபோது என்னத்த சொல்லி பீதியை கிளப்ப போகிறரோ என்ற எண்ணம் மேலோங்கி நீடித்தது.

  சாதனை

  ஆக கடைசியில் இந்த கலக்கம் எல்லாமே புஸ்ஸாகி போனது. விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளதாக மோடி சொல்லி உள்ளார். மேலும் விண்வெளி துறையில் உலகின் தலைச்சிறந்த 4வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

  மறக்குமா என்ன?

  நல்ல விஷயம்தான்.. நமக்கு பெருமைதான்.. ஆனாலும் அறிவிப்பு என்ற ஒத்தை வார்த்தை மோடியிடம் வந்தால் நாடே ஸ்தம்பித்து போய்விடுகிறதே.. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது.. எல்லாம் பழைய தாக்கம்தான்.. அவ்வளவு சீக்கிரம் நம்மைவிட்டு போய்விடுமா என்ன?

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  PM Modis new announcement and also says that Mission Shakti Makes India A Space Super Power
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X