டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா? பிரதமர் மோடி கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    2001 இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டி நினைவிருக்கிறதா? மோடி கூறிய உதாரணம்

    டெல்லி: எப்போதும் மாணவர்களுக்கு நேர்மறையான எண்ணமும், ஊக்குவித்தலும் தேவை என கடந்த 2001-ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியை உதாரணமாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் கூறினார்.

    பொதுத் தேர்வுக்கு தயாராவது எப்படி என்பது குறித்து 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி 3-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி டெல்லியில் உள்ள டல்கட்டோரா உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் 1050 மாணவர்களும் 950 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் பிரதமரின் நிகழ்ச்சியை கண்டு களிக்க தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை தேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை

    நிகழ்ச்சி

    நிகழ்ச்சி

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் பேசுகையில், பிரதமராக இருக்கும் நான் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒவ்வொரு புதிய அனுபவத்தை தரும்.

    ஆற்றல்

    ஆற்றல்

    உங்கள் மனதை தொட்ட நிகழ்ச்சி எது என யாராவது என்னிடம் கேட்டால் நான் இந்த நிகழ்ச்சிதான் என சொல்வேன். ஹேக்கத்தான் நிகழ்ச்சி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் இந்தியாவில் உள்ள இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறமை வெளிக் கொணரப்படும்.

    கவலை

    கவலை

    கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடந்த கிரிக்கெட் போட்டி நினைவிருக்கிறதா? அந்த போட்டியில் இந்தியா கடும் பின்னடைவை சந்தித்தது. அனைவரும் கவலையடைந்தோம்.

    விவிஎஸ் லக்ஷமண்

    விவிஎஸ் லக்ஷமண்

    அப்போது ராகுல் டிராவிடும் விவிஎஸ் லக்ஷமணும் இணைந்து அந்த போட்டியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இதுதான் நேர்மறை எண்ணம், ஊக்குவிப்பு ஆகியவற்றின் ஆற்றலாகும் என்றார் மோடி.

    Take a Poll

    English summary
    PM Narendra Modi asks students Remember India- Australia match in 2001 in Pariksha Pe Charcha 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X