டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடிக்கு 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதிவிருதை வழங்க சியோல் அமைதிப் பரிசு குழு முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்த ஆண்டுக்கான சியோல் அமைதி விருது பிரதமர் மோடிக்கு அறிவிப்பு- வீடியோ

    டெல்லி : 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க சியோல் பரிசுக் குழு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக செயல்படுவதை சிறப்பிக்கும் வகையில் இந்தப் பரிசை வழங்க அந்தக் குழு முடிவு செய்துள்ளது.

    2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்க பரிசுக்குழு முடிவு செய்துள்ளது. சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவது, உலக பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பது, உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய மக்களிடையே மனிதவள மேம்பாடு பண்பை அதிகரிக்க செயல்படுவது, ஊழலுக்கு எதிராக செயல்படுவதுடன் சமூக முன்னேற்ற வழிகளில் வளர்ச்சிக்கான பாதையில் ஜனநாயகத்தை கொண்டு செல்லும் செயலையும் பாராட்டி மோடிக்கு இந்தப் பரிசு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    PM Narendra Modi awarded 2018 seoul peace prize

    பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ள அமைதிக்கான பரிசு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சியோல் பரிசுக் குழு பிரதமர் மோடியை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடுபவர் என்று அடையாளப்படுத்தியுள்ளது. பிரதமரை 'மோடினாமிக்ஸ்' என்று பெருமைப்படுத்தி ஏழை மற்றும் பணக்காரர்களிடையேயான சமூக மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை களையும் விதமாக செயல்பட்டுள்ளார் என்று பாராட்டியுள்ளது.

    பிரதமரின் முன்னெடுப்புகள் அனைத்தும் ஊழலை ஒழித்து அரசை சுத்தப்படுத்தும் முயற்சிகளாக இருக்கின்றன, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக அவர் எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையே இதற்கு உதாரணம். உள்நாட்டு அமைதி மற்றும் ஸ்திரமான வெளிநாட்டு கொள்கைகளை உருவாக்கி சர்வதேச அமைதிக்காக பணியாற்றியதற்கும், 'மோடி டாக்ட்ரின்' மற்றும் 'ஆக்ட் ஈஸ்ட் கொள்கைகள்' மூலம் உலகநாடுகளை ஒருங்கிணைத்துள்ளார் மோடி என பரிசுக்குழு குறிப்பிட்டுள்ளது. சியோல் அமைதி பரிசு பெறும் 14வது நபர் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா - ரிபப்ளிக் கொரியாவுடனான நட்புறவை ஆழப்படுத்தும் விதமாக பெருமைமிகுந்த இந்த விருதை பெற்றுக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இசைவு தெரிவித்துள்ளார். இந்த விருதை சியோல் அமைதி பரிசு அமைப்பு வழங்க உள்ளது.

    சியோல் அமைதி விருது என்பது 1990ம் ஆண்டு அந்த நாட்டில் நடைபெற்ற 24வது ஒலிம்பிக் போட்டியில் சியோல் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டது. அந்த ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 160 நாடுகள் போட்டியில் பங்கேற்றன. உலக நாடுகளிடையே அமைதி, நல்லிணக்கம், நட்புறவு மற்றும் சமரசத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.

    மினி கூவத்தூராக மாறிய குற்றாலம்.. களை கட்டுகிறது.. தினகரனும் வர்றாராம்!மினி கூவத்தூராக மாறிய குற்றாலம்.. களை கட்டுகிறது.. தினகரனும் வர்றாராம்!

    English summary
    The Seoul Peace Prize Committee has decided to confer the 2018 Seoul Peace Prize on Prime Minister Narendra Modi, in recognition of his dedication to improving international cooperation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X