டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன? இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி!

கடைசியாக பிரதமர் மோடி நீண்ட நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டு இருந்த விஷயம் தேர்தல் முடிவிற்கு மறுநாள் நடக்க போகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: கடைசியாக பிரதமர் மோடி நீண்ட நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டு இருந்த விஷயம் தேர்தல் முடிவிற்கு மறுநாள் நடக்க போகிறது.

லோக்சபா தேர்தல் கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கிவிட்டது. மே 23ம் தேதி வரப்போகும் தேர்தல் முடிவுகளுக்காக எல்லா கட்சிகளும் தீவிரமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் தேர்தல் பரபரப்பு இடையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் எப்போது வெளியாகும் என்று கடுமையான எதிர்பார்ப்பு நிலவியது.

பக்கா பிளான்.. மே 23 அல்ல மே 21ம் தேதியே பிரதமரை தேர்வு செய்யும் எதிர்க்கட்சிகள்.. கலக்கத்தில் பாஜக பக்கா பிளான்.. மே 23 அல்ல மே 21ம் தேதியே பிரதமரை தேர்வு செய்யும் எதிர்க்கட்சிகள்.. கலக்கத்தில் பாஜக

வைரல்

வைரல்

மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஓமங் குமார் இயக்கத்தில் ''பிஎம் நரேந்திர மோடி'' படம் வெளியாக உள்ளது. இந்த படம் இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் விவேக் ஓப்ராய் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

பெரிய வைரல்

பெரிய வைரல்

இதனால் பி.எம் நரேந்திர மோடி படம் கடந்த மாதம் முழுக்க தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக இருந்தது. காங்கிரஸ் தொடர்பாக, இந்த படம் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து, பின் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்து, பின் சுப்ரீம் கோர்ட் வரை பிரச்சனை சென்றது. தினமும் தலைப்புச்செய்தியில் இந்த படம் இடம்பிடித்தது.

நடந்தது என்ன

நடந்தது என்ன

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் மோடி படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே சென்சார் போர்ட் அனுமதி வழங்கிவிட்டதால் இதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது. படத்திற்கு தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது

தடை விதித்தது

தடை விதித்தது

இதையடுத்து பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிட கூடாது என்று கூறியது. அதேபோல் யூ டியூபில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் இரண்டும் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் பி.எம் நரேந்திர மோடி திரைப்படம் மே 24ம் தேதி வெளியாக உள்ளது. இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் மறுநாள் இந்த படம் வெளியாக உள்ளது. இதனால் இந்த படத்திற்கு எவ்விதமான எதிர்ப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி சந்தோசம்

மோடி சந்தோசம்

இதனால் தற்போது பிரதமர் மோடி சந்தோசத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். பொதுவாக பிரதமர் மோடி தன்னை மார்க்கெட்டிங் செய்து கொள்வதில் திறமையானவர். தான் செய்ததை மக்களிடத்தில் பிரபலப்படுத்துவதில் திறமை கொண்டவர். இந்த படமும் அப்படி ஒரு படமாக பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
PM Narendra Modi Biopic all set to Release on May 24 After Lok Sabha Election Results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X