டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபனி புயல்.. ஒடிஸா மக்களுக்கு நாடே துணை நிற்கும்- பிரதமர் மோடி உறுதி

Google Oneindia Tamil News

Recommended Video

    Fani Cyclone : 10 ஆயிரம் கிராமங்களில் ருத்ரதாண்டவம்..துயரத்தில் ஒடிஸா மக்கள்

    டெல்லி: ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்துக்கு இந்த நாடே துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    ஒடிஸா மாநிலத்தில் புரி அருகே கோபால்பூர்-சந்த்பாலி இடையே ஃபனி கரையை கடந்தது. அப்போது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    PM Narendra Modi discussed the situation prevailing due to Cyclone Fani

    இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெயர்ப் பலகைகள் பறந்தன. 10 ஆயிரம் கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலுக்கு இது வரை 8 பேர் பலியாகிவிட்டனர்.

    மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஒடிஸாவையே ஃபனி புரட்டி போட்டது. ஒடிஸாவில் ஆட்டத்தை ஆரம்பித்த ஃபனி நேற்று இரவு மேற்கு வங்கத்தை அடைந்தது.

    புயல் பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் முதல்வர் பட்நாயக்கிடம் பேசினேன். ஃபனி புயல் குறித்த பாதிப்பை கேட்டறிந்தேன்.

    ஃபனி புயல் பாதித்த இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஒடிஸாவுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மக்களுடன் இந்த நாடே துணை நிற்கும் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    PM Narendra Modi in twitter says that Spoke to Odisha CM Naveen Patnaik Ji and discussed the situation prevailing due to Cyclone Fani. Assured continuous support from the Central Government in the wake of the cyclone. The entire nation stands in solidarity with all those affected by the cyclone in different parts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X