டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு ஏன் கோபம் வராது தெரியுமா?.. அக்ஷய்குமாருக்கு பிரதமர் மோடி அளித்த திடீர் பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியை நேர்காணல் எடுத்த நடிகர் அக்சயகுமார்-வீடியோ

    டெல்லி: பிரதமராகாவிட்டால் சன்னியாசி ஆகியிருப்பேன் என நடிகர் அக்ஷய்குமாருடனான பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் தனக்கு ஏன் கோபம் வராது என்பது குறித்தும் நரேந்திர மோடி விவரித்துள்ளார்.

    அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமர் மோடி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் நடிகர் அக்ஷய்குமார், அவரிடம் எடுத்த பேட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் வெளியாகியுள்ளது.

    அதில் அக்ஷய்குமார் கேட்ட பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பிரதமரும் சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.

    "உலகத்துக்கு ஒரே கடவுள்"... கொழும்பில் வலம் வரும் 'டூ வீலர்' வெடிகுண்டால் பெரும் பீதி

    லட்டுகள்

    லட்டுகள்

    அதில் பிரதமர் ஆவீர்கள் என நினைத்தீர்களா என்ற கேள்விக்கு எனக்கு அதுபோன்று எப்போதும் எண்ணம் இருந்ததில்லை. ஒரு சாதாரண மனிதனால் அது போல் எல்லாம் நினைத்து பார்க்க முடியாது. நான் பிரதமர் ஆவேன் என கனவு கூட கண்டதில்லை. எனக்கு ஒரு சாதாரண வேலை கிடைத்திருந்தாலும் எனது தாய் அக்கம்பக்கத்தினருக்கு லட்டுகளை வழங்கி கொண்டாடியிருந்திருப்பார். அத்தகைய குடும்ப சூழலில் வளர்ந்தவன் நான்.

     ராணுவ வீரர்கள்

    ராணுவ வீரர்கள்

    ஆனால் இந்த நாடே என்னை விரும்புவது ஏன் என்பது குறித்து நான் அவ்வப்போது பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. நான் சிறு வயதாக இருக்கும் போதே ராணுவ வீரர்களின் தேசப்பற்று என்னை ஈர்த்தது. நான் ராமகிருஷ்ணா மிஷனில் சேர்ந்ததற்கு காரணம் அங்கிருந்தோரால் கவரப்பட்டுதான்.

    கோபம்

    கோபம்

    என் கேள்விக்கு விடையில்லாமல் சுற்றி திரிந்தவன் நான். இதுவரை நான் கோபப்பட்டதே இல்லை. கோபம் என்பது மனித இயல்புகளில் ஒன்று ஆகும். இதுபோன்ற உணர்ச்சிகள் என்னை குறித்த எதிர்மறை எண்ணங்களை மட்டுமே பரப்பும். நான் இப்போதுவரை ஒரு கடைநிலை ஊழியன்தான். எனவே கோபப்படும் சூழல் எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை.

    தயார்

    ஒரு கூட்டத்தில் நீங்கள் கோபப்பட்டால் அது அனைவரையும் பாதிக்கும். முன்பெல்லாம் எனக்கு கோபம் வரும் போது அன்று நடந்த நிகழ்ச்சிகளை நான் ஒரு பேப்பரில் எழுதுவேன். அதன் மூலம் நான் செய்த தவறுகளை உணர்வேன். அடிப்படையில் அசாதாரண சூழல்களை நான் கையாள்வதற்கு என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன்.

     குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    எனது தாயை என்னுடன் வருமாறு அழைத்தால் அவர் கிராமத்தில் நேரத்தை கழிக்கவே அவர் விரும்புவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெரும்பாலும் அரசியல் ரிதீயிலான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் மோடி மௌனம் காப்பது வழக்கம். அது ஏன் என்பதும் அவர் கோபம் கொள்ளாதது ஏன் என்பதும் இந்த பேட்டியில் தெரிகிறது.

    English summary
    PM Narendra Modi says in interview with Actor Akshaykumar that he never get a chance to be angry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X