டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Google Oneindia Tamil News

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வாங்கி கொடுத்துள்ள வீராங்கனை மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து கூறியுள்ளார்.

Recommended Video

    Who Is Mirabai Chanu? India’s first medal at Tokyo Olympics 2020

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியது. கடும் தொற்று காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பதக்க கனவுகளுடன் டோக்கியோவுக்கு சென்றுள்ளனர். நமது இந்திய வீரர்கள் பலரும் பதக்கம் பெற வேண்டும் என்ற வேட்கையுடன் டோக்கியாவில் களமிறங்கி உள்ளனர்.

    பதக்க கனவுடன் காத்திருக்கும் ஒலிம்பிக் நாயகர்கள்.. உற்சாகமாக நம்பிக்கை ஊட்டிய மு.க.ஸ்டாலின்.. செம! பதக்க கனவுடன் காத்திருக்கும் ஒலிம்பிக் நாயகர்கள்.. உற்சாகமாக நம்பிக்கை ஊட்டிய மு.க.ஸ்டாலின்.. செம!

    இந்தியாவுக்கு முதல் பதக்கம்

    இந்தியாவுக்கு முதல் பதக்கம்

    ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி கொடுத்து பெருமை சேர்த்து இருக்கிறார் மீராபாய் சானு. பளு தூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட மீராபாய் சானு, 202 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளார். மீராபாய் சானு 87 கிலோ, 84 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கினார்.

    மீராபாய் சானு அசத்தல்

    மீராபாய் சானு அசத்தல்

    ஆனால் 89 கிலோ எடையை தூக்க அவர் சிரமப்பட்டதால் தங்கத்தை நழுவ விட்டார். இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளித்தாலும் மீராபாய் சானு வாங்கி கொடுத்த வெள்ளிப்பதக்கம்தான் இந்தியாவுக்கு முதல் பதக்கமாகும். மேலும் பளு தூக்கும் பிரிவில்கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி கொடுத்துள்ளார் மீராபாய் சானு

    பதக்க வேட்டை தொடரும்

    பதக்க வேட்டை தொடரும்

    ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்த மீராபாய் சானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு, சினிமா பிரபலங்கள் மீராபாய் சானுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியா மகிழ்ச்சி

    இந்தியா மகிழ்ச்சி

    பிரதமர் நரேந்திர மோடியும் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மீராபாய் சானுக்கு வாழ்த்துக்கள். இதனால் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. மிகவும் அற்புதமான செயல்திறன். மீராபாய் சானு வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது' என்று மோடி கூறியுள்ளார்.

    English summary
    Prime Minister Narendra Modi has congratulated Mirabai Sanu on winning India's first medal at the 2020 Olympics. Similarly, the Chief Minister of Tamil Nadu has congratulated MK Stalin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X