டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடிக்கு வெளிநாட்டுப் பயணங்கள் இல்லாத ஆண்டு.. மறக்க முடியாத 2020!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா காரணமாக வெளிநாட்டு பயணங்களே இல்லாத முதல் ஆண்டாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 2020-ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக கடந்த 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அந்த ஆண்டு முதல் அவர் தனது பதவிக்காலமான 2019-ஆம் ஆண்டு வரை 96 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.

இந்தியாவில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எப்போதும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் பிரதமரை குற்றம்சாட்டின.

நல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்! ,நல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்! ,

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதல் நடந்த போது பிரதமர் நரேந்திர மோடி மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பிரதமர் அலுவலகத்தின் தகவல்களின் படி 2014-ஆம் ஆண்டு 8 நாடுகளுக்கும், 2015-ஆம் ஆண்டு 23 நாடுகளுக்கும் 2016-ஆம் ஆண்டு 17 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

ரூ 517 கோடி

ரூ 517 கோடி

அடுத்த ஆண்டுகளில் 14 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். 2015-இல் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் மட்டும் ரூ. 517.8 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது போன்ற நிதியை வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடாமல் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற செலவிட்டிருக்கலாம் என விமர்சனங்கள் வந்தன.

சீனாவில் கொரோனா

சீனாவில் கொரோனா

ஆனால் இவை அனைத்தும் கடந்த 2019-ஆம் ஆண்டுடன் முடிந்து விட்டது. அந்த ஆண்டு இறுதியில் கொரோனா சீனாவில் பரவியது. இதனால் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கும், மற்ற நாடுகளிலிருந்து சீனாவுக்கும் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

போக்குவரத்து துண்டிப்பு

போக்குவரத்து துண்டிப்பு

இந்த நிலையில் சீனாவிலிருந்து கொரோனா 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இதனால் ஜனவரி 2020 முதல் கொரோனா பாதித்த நாடுகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. மேலும் 2020 தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது.

சர்வதேச பயணம்

சர்வதேச பயணம்

இதனால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது. எனவே இந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி வரை சர்வதேச பயணத்தை கூட மேற்கொள்ளவில்லை.

English summary
Pm Narendra Modi has never made foreign trips during this 2020. This is the one and only year which he never had his foreign trip.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X