டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் முடிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. பிரதமர் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Narendra Modi : இரவு 8 மணிக்கு டிவியில் உரையாடுகிறார் மோடி- வீடியோ

    டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதியை வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியது ஏன் என்பது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கமளித்தார்.

    ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக ரகசிய தகவலை அடுத்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அமைச்சரவை கூடியது.

    PM Narendra Modi is going to talk about Kashmir issue in the TV tonight 8pm

    இதையடுத்து நாடாளுமன்றத்தில் அவை கூடியவுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து அமித்ஷா விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவை நீக்குவதாக அறிவித்தார். இதன் மூலம் 35 ஏ சட்டப்பிரிவும் தானாக நீங்கியது. அத்தோடு ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பறித்து லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் டிவி மூலம் உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி. அச்சமயம் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு தகுதி தரும் 370 சட்டப்பிரிவை நீக்கியது ஏன். ஜம்மு- காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியது ஏன் என்பது குறித்து அவர் விளக்கமளித்தார்.

    English summary
    PM Narendra Modi talks to the nation about abrogating special status to Kashmir today through TV tonight 8pm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X