டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்திக்கு அசத்தும் உடையில் புறப்பட்டார் பிரதமர் மோடி!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய வரலாற்றில் இன்று சிறப்பு மிக்க நிகழ்வாக அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பூமி பூஜைக்கான முதல் செங்கல்லை எடுத்துக் கொடுக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக அவர் டெல்லியில் இருந்து சற்று நேரத்திற்கு முன்பு தனி விமானத்தில் புறப்பட்டார்.

Recommended Video

    Modi in Hanuman Garhi for Lord Hanuman’s darshan

    அவர் வேஷ்டி, குர்தா ஆடை அணிந்து புறப்பட்டுச் சென்றார். அவரது சட்டை ஏறக்குறைய காவி நிறத்தில் இருக்கிறது. வெள்ளை நிற வேஷ்டி அணிந்து செல்கிறார். காலில் வெள்ளை நிற ஷாக்ஸ் அணிந்து, கருப்பு நிறத்தில் ஷூ அணிந்து சென்றார்.

    PM Narendra Modi leaves for Ayodhya with different kurta dhoti

    டெல்லியில் இருந்து லக்னோ செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து பின்னர் தனி ஹெலிகாப்டரில் அயோத்தி செல்கிறார். இவருக்கென தனி ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.

    அயோத்திக்கு மோடி செல்வதை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் இவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இன்று இந்த விழாவில் கலந்து கொள்ள 170 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி ராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு துவக்கத்தில் பிள்ளையார் சுழி போட்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பார்ப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இன்று நடக்கும் இந்த விழா வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமின்றி, ஒவ்வொரு இந்தியனுக்கும் உணர்வுபூர்வமான நாள் என்று அத்வானி நேற்று குறிப்பிட்டு இருந்தார்.

    English summary
    PM Narendra Modi leaves for Ayodhya with different kurta dhoti
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X