டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ட்ரம்புக்கு போன் போட்ட மோடி.. கொரோனா வைரஸ் தடுப்பு பற்றி விரிவான ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற இந்தியா, அமெரிக்காவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

Recommended Video

    PM Modi interacts with sportsperson

    சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    PM Narendra Modi made a phone call to Donald Trump

    இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் "அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன், ஒரு விரிவான தொலைபேசி உரையாடல் மேற்கொண்டேன், நாங்கள் ஒரு நல்ல கலந்துரையாடலை மேற்கொண்டோம், மேலும் COVID-19 ஐ எதிர்த்துப் போராட இந்தியா-அமெரிக்க கூட்டுறவின் முழு பலத்தையும் பயன்படுத்த ஒப்புக்கொண்டோம்" இவ்வாறு, பிரதமர் மோடி இன்று ட்வீட் செய்துள்ளார்.

    மரண பயம் நீக்கும் மிருத்யுஞ்ஜய பிரதோஷம் - ஞாயிறு 9 மணிக்கு மோடி விளக்கேற்ற சொன்னதன் காரணம்மரண பயம் நீக்கும் மிருத்யுஞ்ஜய பிரதோஷம் - ஞாயிறு 9 மணிக்கு மோடி விளக்கேற்ற சொன்னதன் காரணம்

    இந்த வாரத்தில் மட்டும், அமெரிக்கா 1,169 கொரோனா இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது எந்த ஒரு நாட்டிலும் ஒரே நாளில் பதிவான எண்ணிக்கையை விட மிக அதிகமானது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் இரண்டு வாரங்கள் மிக, மிக வேதனையானது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

    கொரோனா வைரஸ் வெளவால்களிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது, ஆனால் வுஹானில் இருந்த ஒரு சுகாதாரமற்ற இறைச்சி சந்தை மூலம் பாங்கோலின் போன்ற மற்றொரு பாலூட்டி வழியாக இது மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    இந்த வைரஸ் முக்கியமாக வயதானவர்களையும், நீண்டகாலமாக உடல்நிலை பிரச்சினை இருந்தவர்களையும் அதிகம் தாக்கியது. ஆனால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடை ஏற்பட்ட சமீபத்திய இறப்பு எண்ணிக்கை என்பது, எல்லா வயதினருக்கும் இதனால் ஏற்படும் ஆபத்துகளை உறுதி செய்வது போல உள்ளது.

    English summary
    Prime Minister Narendra Modi today said India is working closely with the US to win the fight against the COVID-19 pandemic, which has killed thousands and infected over a million across nations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X