Just In
டெல்லியில் அமைச்சரவையுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
டெல்லி: பிரிக்ஸ் மாநாட்டுக்கு இன்று புறப்படும் நிலையில் டெல்லியில் அமைச்சரவையுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 11ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் புதுமையான எதிர்காலத்துக்கான பொருளாதார வளர்ச்சி குறித்து பேசப்படுகிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் செல்கிறார். அதற்கு முன்னதாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் இல்லத்தில் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
சிறிதுநேரம் ஆலோசனை நடத்திய அவர் பிரேசில் புறப்பட்டு சென்றார். இந்த கூட்டத்தில் எது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!