டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்தார் வல்லபாய் பட்டேல் 144-வது பிறந்த நாள்- குஜராத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்தார் வல்லபாய் பட்டேல் 144-வது பிறந்த நாள்- பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

    அகமதாபாத்/டெல்லி: இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 144-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி இன்று காலை மரியாதை செலுத்தினார்.

    நாடு விடுதலை அடைந்த போது பல்வேறு சமஸ்தானங்கள் தனித்தனியாக இருந்தன. இவற்றை அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் பெருமுயற்சிகள் மேற்கொண்டு நமது நாட்டுடன் இணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.

    PM Narendra Modi pays tribute to Sardar Vallabhbhai Patel statue

    அதனால் சர்தார் வல்லபாய் பட்டேல் இரும்பு மனிதர் எனப் போற்றப்படுகிறார். அவரது 144-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

    டெல்லியில் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவபடத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார். குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அங்கு நடைபெற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். டெல்லியில் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை ஓட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    இதேபோல் பல இடங்களிலும் ஒற்றுமை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    பூபேஷ் ஜி! இதோ உங்கள் செப்பல்.. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.. மறக்க முடியாத இந்திராபூபேஷ் ஜி! இதோ உங்கள் செப்பல்.. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.. மறக்க முடியாத இந்திரா

    English summary
    Prime Minister Narendra Modi paid tribute to Sardar Vallabhbhai Patel at Statue of Unity in Gujarat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X