டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனிதாபிமானச் செயல்.. கோவை காயத்ரிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: கால்கள் இல்லாத நாய்க்கு சக்கர நாற்காலி தயாரித்த கோவை காயத்ரியின் மனிதாபிமான செயலை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டினார்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அதன்படி கடைசி ஞாயிறான இன்று அவர் நாட்டு மக்களுடன் பேசினார்.

அப்போது அவர் கொரோனா காலத்து லாக்டவுனையும் முன்கள பணியாளர்களுக்காக தட்டுகளையும் கைகளையும் தட்டி ஓசை எழுப்பியதையும் வீட்டில் தீபம் ஏற்றியதையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

ஏர் இந்தியாவை ஏலம் விடும் நரேந்திர மோதி அரசு: ஊழியர்கள் வாங்க முடியுமா ?ஏர் இந்தியாவை ஏலம் விடும் நரேந்திர மோதி அரசு: ஊழியர்கள் வாங்க முடியுமா ?

பாராட்டு

பாராட்டு

அவர் பேசுகையில் 2021-ம் ஆண்டில் உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு வலிமையடையும். ஓராண்டு காலத்தில் மக்களின் வாழ்வியல் முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களை பாராட்டுகிறேன்.

நாய்

நாய்

கால்களே இல்லாத சிறிய நாய்க்கு கோவையை சேர்ந்த காயத்ரி சக்கர நாற்காலி உருவாக்கித் தந்தது அவரது மனிதாபிமானத்தை காட்டுகிறது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். கோவை சாப்ட்வேர் என்ஜீனியரான காயத்ரி, 4 வயது மதிக்கத்தக்க ஒரு நாயை கொரோனா லாக்டவுனின் போது தத்தெடுத்தார்.

மெக்கானிக்கல் என்ஜீனியர்

மெக்கானிக்கல் என்ஜீனியர்

அந்த நாய்க்கு கால்கள் இல்லை. இதனால் தனது தந்தை மெக்கானிக்கல் என்ஜீனியர் உதவியுடன் சக்கர நாற்காலியை உருவாக்கிக் கொடுத்தார். தற்போது அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அந்த நாய் வீடு முழுவதும் மகிழ்ச்சியாக சுற்றித் திரிகிறது. சக்கர நாற்காலியுடன் இணைக்கப்பட்ட பட்டையில் அமர்ந்து கொள்ளும் வீரா, தனது முன்னங்கால்களை கொண்டு நடக்கிறது.

தத்தெடுக்காதது

தத்தெடுக்காதது

முன்னங்கால்களில் நடக்கும் போது நாயின் கால்கள் அடிபடாமல் இருக்க பிவிசி பைப்பை கொண்டு ஒரு ஷூவை உருவாக்கியுள்ளார். ஒரு மையத்தில் நிறைய நாய்கள் இருந்த போதிலும் இந்த நாயை மட்டும் யாரும் தத்தெடுக்காததால் காயத்ரி குடும்பத்தினர் தத்தெடுத்துள்ளனர்.

English summary
PM Narendra Modi praises pet lover in Coimbatore whose name is Gayathri. She adopted disabled dog and made wheel chair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X