டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஸ்ஸாம் சகோதர, சகோதரிகளே! குடியுரிமை மசோதா குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.. மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ... அஸ்ஸாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு

    டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து அஸ்ஸாமை சேர்ந்த எனது சகோதர சகோதரிகள் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    PM Narendra Modis assurance on Citizenship Amendment Bill

    இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தாமல் போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேறியது.

    இதையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் மேலும் போராட்டம் தீவிரமடைந்து ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.குவாஹாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் மாணவர் அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் கவலை கொள்ள வேண்டாம்.

    நான் தவிர்க்க முடியாதவன்.. அவெஞ்சர்ஸ் தானோஸ் கெட்டப்பில் மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. வீடியோ வைரல் நான் தவிர்க்க முடியாதவன்.. அவெஞ்சர்ஸ் தானோஸ் கெட்டப்பில் மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. வீடியோ வைரல்

    யாருடைய உரிமைகளும் பறிக்கப்படாது என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன். அது போல் அம்மாநிலத்தின் தனி அடையாளம், அழகான கலாச்சாரம் ஆகியவையும் பறிக்கப்படாது. மாநிலம் மென்மேலும் செழித்து வளம் பெற்று வளரும்.

    6-ஆவது பிரிவின்படி அஸ்ஸாம் மாநில மக்களின் நில உரிமைகள், மொழி, கலாச்சாரம், அரசியல் ஆகியவை நிச்சயம் பாதுகாக்கப்படும் என நானும் மத்திய அரசும் உறுதியளிக்கிறோம் என தெரிவித்துள்ளார் மோடி.

    English summary
    PM Narendra Modi in his twitter says that I want to assure my brothers and sisters of Assam that they have nothing to worry after the passing of #CAB.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X