டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுய சார்புதான் இனி இந்தியாவின் தாரக மந்திரம்- சுதந்திர தினத்தில் மோடி உரை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

பிரதமர் மோடியின் உரை மற்றும் விழா தூர்தர்ஷனின் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால், இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அளவு குறைக்கப்பட்டன.

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், காலை 7.30 மணிக்கு, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தொடங்கியது.

Newest First Oldest First
11:40 AM, 15 Aug

மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆகியோர் பங்கேற்பு.
11:09 AM, 15 Aug

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் முதல்வர் பழனிச்சாமி சுதந்திர தின விழாவில் பேச்சு. அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன் - முதல்வர். சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை.
8:59 AM, 15 Aug

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்த திட்டத்தின்கீழ், அனைத்து குடிமக்களுக்கும் ஹெல்த் ஐடி கார்டு வழங்கப்படும். சுகாதார கட்டமைப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் திட்டம்- மோடி பேச்சு.
8:47 AM, 15 Aug

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்தி வருகிறார்
8:38 AM, 15 Aug

விரைவில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு: பிரதமர் மோடி உரை. கொரோனா தடுப்பூசி தொடர்பாக 3 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி சோதனைகள் நடைபெற்று வருகின்றன- மோடி.
8:19 AM, 15 Aug

சவுமியா சுவாமிநாதனுக்கு முதல்வரின் சிறப்பு விருது அறிவிப்பு. உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன்.
8:18 AM, 15 Aug

சிறந்த மாநகராட்சியாக வேலூர், சிறந்த நகராட்சியாக விழுப்புரம் தேர்வு. சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.
8:12 AM, 15 Aug

உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்பது இனி நமது மந்திரம்- பிரதமர் உரை. உலக நாடுகள் இப்போது இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் இந்திய பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். விவசாயம், விண்வெளி, சுகாதாரம் என பல துறைகளிலும் சுயசார்பு நமது நோக்கம்.
8:01 AM, 15 Aug

சுயசார்பு என்பது 130 கோடி இந்தியர்களின் மந்திரமாக மாறிப் போயுள்ளது- மோடி உரை
7:51 AM, 15 Aug

பன்முகத் தன்மைதான் இந்தியாவின் பலம் -பிரதமர் மோடி. இந்தியாவின் ஒற்றுமை உலகத்துக்கே பாடம்- மோடி பேச்சு. இந்தியாவை தொடர்ந்து ஆளலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள். தியாகம் செய்வதற்கு இந்தியர்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரை
7:40 AM, 15 Aug

சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் மோடி
7:34 AM, 15 Aug

செங்கோட்டையில் 7வது முறையாக தேசியக் கொடியேற்றினார் மோடி
7:32 AM, 15 Aug

செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி. பட்டொளி வீசி பறக்கிறது பாரத மணிக்கொடி .
7:24 AM, 15 Aug

முப்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி. செங்கோட்டையில் சற்று நேரத்தில் தேசியக் கொடியேற்றுகிறார் பிரதமர்.
7:22 AM, 15 Aug

தேசியக் கொடியேற்ற செங்கோட்டை வந்தார் பிரதமர் மோடி
7:16 AM, 15 Aug

டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை. இன்னும் சற்று நேரத்தில் செங்கோட்டை செல்கிறார் பிரதமர்.
6:52 AM, 15 Aug

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியிலுள்ள தனது வீட்டில் தேசியக் கொடியேற்றினார். இந்தியா சுய சார்பு பெறும்போதுதான் சுதந்திரத்திற்கான முழு அர்த்தம் கிடைக்கும்- ராஜ்நாத்சிங்.
6:18 AM, 15 Aug

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று முதல்வர் பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார். காலை 8.45மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார் முதல்வர். கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்குவார்.
6:12 AM, 15 Aug

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர். காலை 7.30 மணிக்கு செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரை.
5:40 AM, 15 Aug

செங்கோட்டையைச் சுற்றி டெல்லி காவல்துறை, மத்திய ஆயுத போலீஸ் படைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக் காவல்படைகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
5:40 AM, 15 Aug

சுதந்திர தின விழாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால், டெல்லி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

PM Narendra Modis Independence Day speech live
English summary
On the occasion of India's 74th Independence Day, Prime Minister Narendra Modi will address the nation on today from the Red Fort in Delhi. Prime Minister Modi's speech and ceremony will be telecast live on Doordarshan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X