டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெர்மிஷன் வாங்காம டிவியில பேசிட்டாரு பிரதமர் மோடி.. ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Mission Sahkti: விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி சாதித்த இந்தியா-வீடியோ

    டெல்லி: செயற்கைகோளை தாக்கி அழிக்கும் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பான மிஷன் சக்தி குறித்து பிரதமர் மோடி பேசியது விதிமீறலா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்கிறது.

    விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றிய செயற்கைகோளை சுட்டு வீழ்த்தி இந்தியா சாதனை படத்த 'மிஷன் சக்தி' திட்டம் குறித்து தூர்தர்சன் தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேசினார்.

    பிரதமர் மோடியின் செயல் தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    கிரண் பேடியை பார்த்து இப்படி பேசலாமா மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.. பாஜக பரபர புகார் கிரண் பேடியை பார்த்து இப்படி பேசலாமா மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.. பாஜக பரபர புகார்

    மோடியின் உரை

    மோடியின் உரை

    இந்நிலையில். வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்களுக்கு மிஷன் சக்தி குறித்து உரையாற்றியது தொடர்பான அறிக்கை தூர்தர்சன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் இருந்து பெறப்பட்டுள்ளது.

    மோடி பேச்சு

    மோடி பேச்சு

    ஊடகம் முனபு தோன்றி பேசுவதற்கு பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெறவில்லை. தொலைக்காட்சியில் பிரதமர் பேசுவது தொடர்பா, பிரதமர் அலுவலகமும் தேர்தல் ஆணையத்திடம் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக அவரது பேச்சில் தேர்தல் விதிமீறல் உள்ளதா? என்பதை அறிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியது.

    விதிமீறலா?

    விதிமீறலா?

    மோடியின் பேச்சு குறித்து விசாரித்து வரும் குழு, தூர்தர்சனுக்கு அந்த வீடியோ குறித்த தகவல்களை கொடுக்கும்படி கடிதம் எழுதியுள்ளது. இது தவிர மாநில தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள், பிரைவேட்டாக யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே பிரதமர் மோடியின் பேச்சில் விதிமீறல் உள்ளதா என்பதை வெள்ளிக்கிழமை(இன்று) முடிவு செய்யும் என தெரிவித்தனர்.

    1.82 கோடி இளம் வாக்காளர்கள்

    1.82 கோடி இளம் வாக்காளர்கள்

    நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் ஒட்டுமொத்தமாக 90.74 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் 18-19 வயது வாக்காளர்கள் 1.82 கோடி எனவும் தெரிவித்துள்ளது.

    திமுக எம்எல்ஏ மீது வழக்கு

    திமுக எம்எல்ஏ மீது வழக்கு

    திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் விநியோகிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மார்ச் 28ம் தேதி கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், உள்பட 9 பேர் மீது தேர்தல் ஆணையம் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முதலிடம்

    தமிழ்நாடு முதலிடம்

    மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பணம், மது மற்றும் பரிசுப்பொருட்களை நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தமிழகம் ரூ.130 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 127 .50 கோடிகளுடன் ஆந்திரா இரண்டாம் இடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசம் 119.57 கோடிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் நாடு முழுவதும இதுவரை 202 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    English summary
    PM Narendra Modi's mission shakti speech: PMO didn’t get any permission from, the EC
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X