டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

NEP 2020: தாய்மொழியுடன் பிற மொழியையும் கற்கும்போதுதான் இந்தியா வளம் பெறும்- பிரதமர் நரேந்திர மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: தாய்மொழியுடன் பிற மொழியையும் கற்கும் போதுதான் இந்தியா வளம்பெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    PM Modi speech on NEP 2020

    ஸ்மார்ட் இந்தியாஹேக்கத்தான் 2020-ன் இறுதிச் சுற்றின் போது மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல் நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசினார்.

    அவர் பேசுகையில் உலகின் வளர்ந்த நாடுகள் தாய்மொழி கல்வி மூலம் தான் ஏற்றம் பெற்றுள்ளன. தாய்மொழியுடன் பிறமொழியையும் கற்கும் போதுதான் இந்தியா வளம்பெறும். மனப்பாட முறையிலிருந்து செயல்வழிக் கல்வியை நோக்கி செல்ல வேண்டும்.

    கோவை மாணவியின் மழைப் பொழிவை கண்டறியும் தொழில்நுட்பத்திற்கு மோடி பாராட்டு கோவை மாணவியின் மழைப் பொழிவை கண்டறியும் தொழில்நுட்பத்திற்கு மோடி பாராட்டு

    இந்தியா

    இந்தியா

    புதிய கல்விக் கொள்கையானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம் ஆகும். பல துறைகளில் மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய சமூகம் எதிர்பார்ப்பதை புதிய கல்விக் கொள்கை நிறைவேற்றியுள்ளது.

    களஞ்சியம்

    களஞ்சியம்

    இதுநாள் வரை கல்வி துறையில் இருந்த பிரச்சினைகள் இந்த புதிய கொள்கை மூலம் களையப்படும். வேலையை தேடுவதற்கு பதிலாக வேலையை உருவாக்குவதே புதிய கல்விக் கொள்கையாகும். இந்தியா பல நூறுமொழிகளின் களஞ்சியம், அவற்றை கற்க நம் வாழ்நாள் போதாது.

    மாணவர்கள்

    மாணவர்கள்

    2035ஆம் ஆண்டுக்குள் கல்வி வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விருப்பப் பாடங்களை தேர்வு செய்யும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கற்பது, கேள்வி கேட்பது, தீர்வை தருவது - ஆகிய மூன்றையும் மாணவர்கள் விடக் கூடாது.

    அபார நம்பிக்கை

    அபார நம்பிக்கை

    இன்றைய இளைஞர்களின் மீது அபார நம்பிக்கை உள்ளது. தாய்மொழியின் மூலம்தான் ஒருவரின் முழு திறமையும் வெளிப்படும். 21 நூற்றாண்டு மாணவர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

    English summary
    PM Narendra Modi says that if we learn other languages with our mother tongue then only India will cherish.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X