டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாங்க .. அனைத்து பிரச்சினைகளிலும் ஆரோக்கியமான விவாதம் செய்யலாம்.. பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    WATCH Prime Minister Narendra Modi: We want frank discussions on all matter

    டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து பிரச்சினைகளிலும் ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றில் இருந்து டிசம்பர் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. கடந்த லோக்சபா கூட்டத்தொடரில் காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கியது, முத்தலாக் சட்டம், மோட்டார் வாகன சட்டம் என்று முக்கிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

     PM Narendra Modi says about winter session

    நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இந்த முறை 20 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இது, தற்போது புதிதாக அமைந்துள்ள 17-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடராகும். குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

    அவர் கூறுகையில் இந்த ஆண்டின் கடைசி கூட்டத் தொடர் என்பதால் இது முக்கியமானது. இந்திய அரசியலமைப்பு 70 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது. இந்த கூட்டத் தொடரில் ஆரோக்கியமான விவாதங்களை நடத்துவோம் என நம்புகிறேன்.

    உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்ஏ போப்டே பதவி ஏற்றார்!உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்ஏ போப்டே பதவி ஏற்றார்!

    நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கலாம். இந்த கூட்டத்தொடரை பயனுள்ளதாக்க அனைவரும் தங்கள் திறமைகளை பயன்படுத்த வேண்டும் என்றார் மோடி. இந்த கூட்டத்தொடரில் 27 புதிய மசோதாக்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

    English summary
    PM Narendra Modi hopes that this session will face healthy discussions and debates on all the issues for Nation's development.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X