டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது 5 நிமிடங்கள் எனக்காக பால்கனியில் நிற்பதா?.. சர்ச்சையில் என்னை சிக்க வைக்க வேண்டாம்- மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: அனைவரும் 5 நிமிடங்கள் எனக்காக எழுந்து நிற்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை பார்க்கும் போது என்னை சர்ச்சையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக தெரிகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Recommended Video

    Beela Rajesh Family : பீலா ராஜேஷ் குடும்ப பின்னணி

    கொரோனா வைரஸால் இந்தியாவில் 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 21 நாட்கள் ஊரடங்கு மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும் கொரோனாவின் 3ஆவது நிலையை அடையக் கூடாது என்பதற்காகவும் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

    பாராட்டு

    பாராட்டு

    வளர்ந்த நாடுகளில் நம்மை காட்டிலும் அதிகளவிலான மக்கள் வைரஸ் தொற்றால் பாதித்தும் தங்கள் இன்னுயிர்களை இழந்தும் உள்ளனர். இதற்கு காரணம் அவர்களது அலட்சியமும் ஊரடங்கு பிறப்பிக்காததும்தான். ஆனால் நம் நாட்டில் அந்த எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் முயற்சிகள்தான் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

    வைரல்

    வைரல்

    இந்த நிலையில் கொரோனாவை எதிர்த்து மோடி செய்யும் முயற்சிகளுக்கு அவருக்கு மரியாதை செய்ய வரும் ஞாயிற்றுக்கிழமை பால்கனிகளில் 5 நிமிடங்கள் எழுந்து நிற்குமாறு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஒரு போஸ்டரும் இன்டர்நெட்களில் உலா வருகின்றன.

    மோடி

    மோடி


    அந்த விளம்பரத்தில் இந்த நபர் நமக்காவும் நமது தேசத்திற்காகவும் நிறைய செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரதமர் மோடியை சென்றடைந்தது. இதையடுத்து அந்த செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஏழை குடும்பத்தினரை தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறுகையில் மோடி மரியாதை செலுத்துவதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை பால்கனிகளில் எழுந்து நிற்குமாறு சமூகவலைதளங்களில் தகவல் பரவுவதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. இதை பார்க்கும் போது என்னை சர்ச்சையில் சிக்க வைக்க செய்யப்படுவது போல் உள்ளது. யாரோ நல்லெண்ணத்தில் இப்படி விளம்பரம் கொடுத்திருக்கலாம்.

    கொரோனா

    கொரோனா

    உண்மையிலேயே உங்களுக்கு என் மீது அன்பு இருந்து எனக்கு மரியாதை செய்ய விரும்பினால் இந்த கொரோனா நெருக்கடி முடியும் ஏழை மக்களை தத்தெடுத்து கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும். இதை தவிர பெரிய மரியாதை எனக்கு செய்ய இயலாது என மோடி தெரிவித்துள்ளார்.

    English summary
    PM Modi says that It has been brought to my attention that some people are running a campaign that to to honour Modi stand for 5 minutes. At first glance, it seems like a mischief to drag Modi into controversies: Prime Minister Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X