டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆக்கிரமிப்பதாக கூறும் அமெரிக்கா.. மறுக்கும் இந்தியா.. சீனாவுக்கு எதிராக என்ன வியூகம்?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய நிலப் பகுதிக்குள் சீனா ஊடுருவி உள்ளதாக அமெரிக்க அரசியல்வாதிகள் கூறி வருகிறார்கள், ஆனால், எல்லையில் ஒரு இன்ச் நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். எனவே, அடுத்ததாக இந்தியா எந்த மாதிரி மூவ் செய்ய உள்ளது என்பது சார்ந்த பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லடாக் எல்லையில், நடைபெற்ற மோதல் தொடர்பாக நேற்று அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

பாக். அனுப்பிய டிரோன்.. படைகளை குவித்த நேபாளம்.. தயார் நிலையில் சீனா.. எல்லையில் பெரும் பதற்றம்! பாக். அனுப்பிய டிரோன்.. படைகளை குவித்த நேபாளம்.. தயார் நிலையில் சீனா.. எல்லையில் பெரும் பதற்றம்!

ஆக்கிரமிப்பு இல்லை

ஆக்கிரமிப்பு இல்லை

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் ஒரு இன்ச் நிலப்பகுதியை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேநேரம் சீன வெளியுறவு துறை நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிவிப்பில் கல்வான் பள்ளத்தாக்கு, சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ராணுவம் மோதல்

ராணுவம் மோதல்

கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு உட்பட்ட பகுதி என்பதால்தான் அதற்குள் அத்துமீறிய சீன ராணுவம் மீது இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. எனவேதான், நீண்ட நாட்களாக பதற்றம் நிலவிய நிலையில், அதன் உச்சமாக சீன ராணுவத்தினர் கட்டை மற்றும் கற்களால் தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால் பிரதமரின் அறிவிப்புபடி இதுவரை சீன ராணுவம் நமது எல்லையை ஆக்கிரமிக்கவில்லை.

சிதம்பரம் கேள்வி

சிதம்பரம் கேள்வி

இந்த நிலையில்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நமது நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றால் எதற்காக மோதல் நடைபெற்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு இன்னமும் ஆளும் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. அதேநேரம் ராகுல் காந்தி போன்றோர் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கருத்து

அமெரிக்கா கருத்து

அதேநேரம், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் போன்றோர் கொரானா வைரஸ் பரவ காரணமாக இருந்த சீனா, அந்த அதிருப்தியை திசை மாற்றுவதற்காக பல நாடுகளிடம் சீண்டலில் ஈடுபடுகிறது. இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு அது தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இந்திய எல்லைக்குள் சீன படைகள் நுழைவதாக அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கின்றன.

அமெரிக்கா ஆதரவு

அமெரிக்கா ஆதரவு

ராணுவ பலத்தை பொருத்தளவில், எண்ணிக்கையில் உலகிலேயே அதிக வீரர்களை கொண்டது இந்தியா. இருப்பினும் சீனா பொருளாதார வசதி கொண்டது. அவர்களிடம், தொழில்நுட்பம், அதிநவீன ஆயுதங்கள் போன்றவற்றை அதிகம் வைத்துள்ளார்கள். எனவே, அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டின் உதவி நமக்கு தேவைப்படுகிறது. இப்படியான ஒரு சூழ்நிலையில் சீனா, இந்தியாவிற்குள் ஊடுருவி எது என்று அமெரிக்காவில் எழுந்துள்ள கருத்துக்களை இந்தியா பயன்படுத்திக் கொண்டால் அது சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு பயன்படும் என்கிறார்கள் சர்வதேச விவகார வல்லுனர்கள்.

அவசிய தேவை

அவசிய தேவை

சீனா ஊடுருவவில்லை, என்று நாம் தொடர்ந்து மறுத்து வந்தால், அமெரிக்காவும் இதில் தலையிடப்போவதில்லை. கிழக்கே சீனா, மேற்கே பாகிஸ்தான் என நமது எல்லைகளுக்கு தொந்தரவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள் அவர்கள். மேலும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதி தங்களுடையது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு, இன்னும் வலிமையான கண்டனத்தை இந்தியா தெரிவிக்கவில்லை. கல்வான் அவர்களுடையது என்று ஒப்புக்கொண்டதை போலாகிவிடும் என்பதால், இந்திய தரப்பு இதற்கு தக்க பதில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்லது.

ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் சீனா

ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் சீனா

கல்வான் தங்களுடையது என சீனா கூறுவதை பார்த்தால், தனது ஆக்கிரமிப்பை அது நியாயப்படுத்துவது தெளிவாக தெரிகிறது. ஆனால் ஆக்கிரமிப்பு இல்லை என நாம் கூறுவதால், இந்த பிரச்சனையை இந்தியா எப்படி லாவகமாக சமாளிக்கப் போகிறது இந்தியா? இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்ய ஏன் பிரதமர் இவ்வாறு ஒரு கருத்தை கூறி இருப்பார்? என்ற பல கேள்விகள் எதிர்க்கட்சி தலைவர்களிடம் உள்ளன.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

இந்திய இறையாண்மையை காப்பதற்காக அனைத்து கட்சிகளும், அரசியல் பேதங்களை மறந்து ஓரணியில் நிற்போம் என்று, நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் அனைவரும் கூறி உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, மத்திய அரசுக்கு பலம் கூடியுள்ளது. ஒருவரும், ஆக்கிரமிக்கவில்லை என்று கூறிக் கொண்டே மற்றொரு பக்கம் எல்லை தங்களுடையது என்று கூறும் சீனாவுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். இந்த இரு பக்க உத்திகளில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக இந்தியா எடுக்கப்போகும் அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி உலகம் முழுக்க பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

English summary
Us blames China for incursions into India but, PM Narendra Modi says no one, enter inside India border and posts have not been occupied.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X