டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் சரியாக நடந்தால்..ஜம்மு காஷ்மீர் மீண்டும் மாநிலமாகும்.. மோடி உறுதி

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு- காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிக முடிவுதான், விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு தகுதி தரும் 370 சட்டப்பிரிவை நீக்கியது ஏன். ஜம்மு- காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியது ஏன் என்பது பிரதமர் நரேந்திர மோடி டிவியில் 39 நிமிடங்கள் உரையாற்றினார்.

அவர் பேசுகையில் ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிக முடிவுதான். காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். ஜம்மு -காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

விவசாயிகள்

விவசாயிகள்

லடாக்கில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி மையம் அமைக்க வாய்ப்பு உள்ளது. லடாக்கை புதிய பாதைக்கு அழைத்து செல்வோம். லடாக் மூலிகை வளங்களை சந்தைப்படுத்தி விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

லோக்சபா தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற காஷ்மீர் மக்களில் ஆயிரக்கணக்கானோரால், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் வாக்களிக்க முடியவில்லை என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இப்போது நிலைமை மாறும்.

உரிமை

உரிமை

ஜம்மு காஷ்மீர் தயாரிப்புகளை உலகமெங்கும் பிரபலப்படுத்தி ஊக்குவிக்க அனைத்து தொழில்நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும்; அந்த உரிமை என்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும்.

லடாக்

லடாக்

ஆளுநர் ஆட்சியால் காஷ்மீரில் சிறப்பாக வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி சட்டங்களால் காஷ்மீரில் ஒரு சாரார் மட்டுமே பயனடைந்து வந்தனர். லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்.

இன்பத் துன்பங்கள்

இன்பத் துன்பங்கள்

மாற்றுக் கருத்தை மதிக்கிறோம். ஆனால் தேச விரோத செயல்களை ஆதரிக்க முடியாது. மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளால் ஜம்மு- காஷ்மீர் மக்கள் கலக்கமடைய தேவையில்லை. ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களின் இன்பத் துன்பங்களில் நாங்கள் பங்கெடுப்போம்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

ஜம்மு -காஷ்மீர் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பக்ரீத் பண்டிகையை எந்த வித பிரச்சினையும் இன்றி காஷ்மீர் மக்கள் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

English summary
PM Narendra Modi says that assembly election will be conducted for Kashmir and state status will be given soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X