டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் கடுமைதான்.. ஆனால் கொரோனாவை ஒழிக்க வேறு வழியில்லை.. மன் கீ பாத்தில் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுன் கடுமைதான். ஆனால் கொரோனாவை ஒழிக்க வேறு வழியில்லை என மன் கீ பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா..

    கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் மூலம் நாட்டு மக்களுக்கு ரேடியோவில் உரையாடினார்.

    அப்போது அவர் கூறுகையில் கொரோனாவுக்காக 21 நாட்கள் லாக்டவுன் என்ற கடும் நடவடிக்கைகள் உங்களில் பெரும்பாலானோரை கஷ்டப்படுத்தியிருக்கும். குறிப்பாக ஏழை மக்களை. உங்களில் சிலர் என் மீது கோபத்தில் இருப்பீர்கள் என்பதை அறிவேன்.

    வருத்தம்

    வருத்தம்

    ஆனால் கொரோனாவை வெல்லவே இது போன்ற கடும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவை எதிர்த்து போராடுவது எளிதான காரியம் அல்ல. இந்திய மக்களை பாதுகாப்பாக வைப்பது முக்கியமானதொன்று.

    பாதுகாப்பது

    பாதுகாப்பது

    யாரும் வேண்டுமென்றே ஊரடங்கு விதிகளை மீறவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சிலர் அப்படிதான் செய்கின்றனர். அவர்களுக்காக நான் ஒன்றை சொல்கிறேன். இந்த லாக்டவுன் விதிகளை கண்டிப்பாக பின்பற்றாவிட்டால் கொரோனா கொடூரத்திலிலிருந்து அவர்களை பாதுகாத்து கொள்வது மிகவும் கடினமாகும்.

    வீரர்கள்

    வீரர்கள்

    கொரோனா வைரஸுக்காக ஏராளமான வீரர்கள் போரிட்டு வருகின்றனர். வீடுகளில் இருந்து மட்டுமல்ல வீடுகளுக்கு வெளியே இருந்தும் அந்த வீரர்கள் போரிடுகின்றனர். நமது மருத்துவர்கள், செவிலியர்கள்தான் இந்த யுத்தத்தில் முன்னணியில் இருக்கும் வீரர்கள். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு அறிவித்திருக்கிறோம்.

    பாராட்டு

    பாராட்டு

    வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டோரில் சிலர் விதிகளை மீறுவதாக வெளிவரும் தகவல்கள் எனக்கு வருத்தம் அளிக்கிறது. சமூக விலகலை அதிகரியுங்கள். பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றார் பிரதமர். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களிடம் மோடி உரையாடினார். மேலும் அவர்களுக்கு தரமான சிகிச்சை அளித்த மருத்துவர்களை பாராட்டினார்.

    English summary
    PM Narendra Modi says that Lockdown are harsh measures. But we dont know what do to against Coroanavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X