டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி... பாஜக நிர்வாகிகளிடையே மோடி பரபரப்பு பேச்சு!

Google Oneindia Tamil News

Recommended Video

    யாருடன் கூட்டணி?-மோடி கூறிய பதில்-வீடியோ

    டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    வடமாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாஜக மண்ணை கவ்வியது. இது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்து விடக் கூடாது என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள பாஜக கட்சியினருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். தமிழகத்தைத் தொடர்ந்து வடமாநிலங்களில் நடத்தவுள்ளார்.

    உரையாடல்

    உரையாடல்

    இந்த உரையாடலில் பாஜக வெற்றி பெறுவதற்கான கருத்துகளை நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். அதன்படி அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர், தருமபுரி ஆகிய தொகுதிக்குள்பட்ட தமிழக பாஜகவினருடன் மோடி உரையாடல் நடத்தினார்.

    கூட்டணி

    கூட்டணி

    அப்போது அவர் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்காது. தமிழகத்தில் கூட்டணிக்கான கதவு திறந்தே இருக்கிறது. மக்களுடன் அமைக்கப்படும் கூட்டணியே வெற்றி பெறும்.

    கூட்டணி கட்சி

    கூட்டணி கட்சி

    வலுவான தேசிய ஜனநாயக கூட்டணி என்பது நம்பிக்கைதான், கட்டாயம் அல்ல. பாஜக தனிபெரும்பான்மை பெற்ற போதிலும் கூட்டணி கட்சிகளை இணைத்தே ஆட்சி அமைத்தது.

    பாஜக பின்பற்றுகிறது

    பாஜக பின்பற்றுகிறது

    இந்திய அரசியலில் 20 ஆண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக கூட்டணி அமைத்தவர் வாஜ்பாய். அவர் காட்டிய வழியை பாஜக பின்பற்றுகிறது. பாதுகாப்பு துறையை இடைத்தரகர்களின் கூடாரமாக மாற்றிவிட்டது காங்கிரஸ் கட்சி. அக் கட்சி இந்திய ராணுவத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்றார் பிரதமர் மோடி.

    English summary
    PM Narendra Modi says that no election alliance with anybody in Tamllnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X