டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் அளித்த தீர்ப்பு இது.. பணிவோடு ஏற்கிறேன்.. பிரதமர் நரேந்திர மோடி

தேர்தல் முடிவை பணிவோடு ஏற்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் அளித்த தீர்ப்பு இது... தோல்வி குறித்து மோடி கருத்து- வீடியோ

    புதுடெல்லி: வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள் என்றும், மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

    நேற்று 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது எதிர்பார்க்காத தோல்விகளை மாநிலங்களில் பாஜக சந்தித்தது.

    நேற்று காலை ஓட்டு எண்ண ஆரம்பித்தவுடனேயே தேர்தல் முடிவுகள் ஓரளவு கணிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து பாஜக அலுவலகங்களில் ஈயாட தொடங்கியது, மாறாக காங்கிரஸ் அலுவலகங்களில் களை கட்ட ஆரம்பித்தது.

    பதிலளிக்க மறுப்பு

    பாராளுமன்ற கூட்டத்துக்கு வந்தபோது, 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, அதைப்பற்றி எதுவுமே சொல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டதும் முதல்வேலையாக பாஜக தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    மவுனம் கலைத்தார்

    இதன்பிறகு நாளெல்லாம் அமைதியாக இருந்த மோடி, நேற்றிரவு இது குறித்து தன் மவுனத்தை கலைத்து கருத்து தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது சம்பந்தமான தன்னுடைய கருத்தையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மக்களுக்கு நன்றி

    அதில் பிரதமர் சொல்லி இருப்பதாவது: "மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. இந்த மாநிலங்களில் பாஜக அரசு மக்கள் நலனுக்காக அயராது உழைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    அதேபோல பாஜகவை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய காங்கிரசுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாழ்த்துக்கள். இதே போல் தெலுங்கானாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள சந்திரசேகர ராவ் கட்சிக்கும், மிசோரமில் வென்றுள்ள மிசோ தேசிய முன்னணி கட்சிக்கும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    தோல்வியை ஏற்பதாகவும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பெருந்தன்மையுடன் கருத்துக்களை பதிவிட்ட பிரதமர் மோடி, பாஜக தொண்டர்களுக்கும் ஆறுதல் சொல்ல உள்ளார், "ஐந்து மாநில தேர்தல்களில் இரவு, பகல் பாராமல் உழைத்த பாஜகவினரையும் வணங்குகிறேன். வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம்" என்று சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

    English summary
    PM Narendra Modi speeks about election results. Modi congratulates Congress, and TSR, Mizo National Front
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X