டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமரசத்திற்கு இடமில்லை... முப்படைகளும் நவீனமயமாக்கப்படும்... பிரதமர் மோடி நறுக் பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்த சமரசமும் செய்யாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சர்வதேச அளவில் போர் களச்சூழல் மாறி உள்ளதால் அதற்கு ஏற்ப இந்திய முப்படைகளும் நவீனமயமாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 20 வது ஆண்டு விழா டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

PM Narendra Modi: terrorism is challenging the whole of mankind

விழாவில் பேசிய பிரதமர் மோடி, கார்கில் போரின் வெற்றி எந்த தனிப்பட்ட அரசுக்கும் சொந்தமானது அல்ல, அது நாட்டின் வெற்றி என்றார். நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், விண்வெளி போரிலும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2020 தான் இலக்கு... நதிகள் இணைக்கப்படும்... தமிழக அரசு உறுதி 2020 தான் இலக்கு... நதிகள் இணைக்கப்படும்... தமிழக அரசு உறுதி

சர்வதேச அளவில் போர்க்கள சூழல் மாறி உள்ளதால் பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்துவதை மத்திய அரசு தலையாய நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு படைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக இன்னுயிரை தந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், உயர்த்தப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

English summary
PM Narendra Modi: terrorism is challenging the whole of mankind. Those defeated in war are using pseudo war to fulfill their political objectives and encouraging terrorism. #KargilVijayDiwas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X