டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த Attitudeஐ மாற்றுங்கள்! இல்லாவிட்டால்.. ஆப்சென்ட்டான பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் கடும் வார்னிங்?

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த பாஜக எம்பிக்கள் அவைக்கு வருகை தராதது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று 6 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே கூட்டத் தொடரில் கட்டாயம் தினந்தோறும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களை ஆதரிக்க ஆளும் கட்சி எம்பிக்கள் இருப்பது அவசியம் என்பதாலும் அதே போல் அரசு கொண்டு வரும் மசோதாக்களை தடுப்பதற்காக எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருப்பது அவசியம் என்பதாலும் இந்த கொறடா உத்தரவு வழங்கப்படுகிறது.

வைகை ஆற்றில் பெருவெள்ளம்.. மதுரை தரைப்பாலங்கள் மூழ்கின.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவைகை ஆற்றில் பெருவெள்ளம்.. மதுரை தரைப்பாலங்கள் மூழ்கின.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கூட்டத் தொடர்

கூட்டத் தொடர்

இந்த நிலையில் ஆளும் பாஜகவின் எம்பிக்கள் கடந்த சில தினங்களாக கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ராஜ்யசபாவில் 12 எம்பிக்கள் நீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாஜக நாடாளுமன்றக் கூட்டம்

பாஜக நாடாளுமன்றக் கூட்டம்

அவர்களுக்கு துணையாக மக்களவையிலும் கடும் அமளி ஏற்படுகிறது. இதை சமாளிக்க இரு அவைகளிலும் ஆளும் கட்சி எம்பிக்கள் போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்றைய தினம் பாஜக நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அப்போது பிரதமர் மோடி கூட்டத் தொடருக்கு வராத எம்பிக்களிடம் மிகவும் கடிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கூறுகையில் "குழந்தைகள் கூட ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வதை விரும்ப மாட்டார்கள். எனவே எம்பிக்கள் அவர்களது செயல்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் மாற்றங்கள் தானாக நிகழும்" என பிரதமர் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாபஸ்

வாபஸ்

இந்த நிலையில் 12 ராஜ்யசபா எம்பிக்கள் நீக்கத்தை திரும்ப பெறுமாறு ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது போல் மக்களவையில் நாகாலாந்தில் ஆயுத படை சிறப்பு அதிகார சட்டத்தால் 14 அப்பாவிகள் கொல்லப்பட்ட நிலையில் அந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்பது குறித்து விவாதிக்க மக்களவையில் தேசிய மக்கள் கட்சியின் எம்பி அகதா சங்மா ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸை கொடுத்துள்ளார்.

English summary
PM Narendra Modi warns MPs in both the houses about change on its own.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X