டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி!

பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Prime Minister Narendra Modi's 69th Birthday today

    டெல்லி: பொழுது விடிஞ்சதும்... ஆயிரக்கணக்கானோர் நடமாடும் அந்த ரயில்வே ஸ்டேஷனில்.. ஓடிவந்து டீக்கடையை சுத்தம் செய்றதுதான் 15 வயது சிறுவனுக்கு முதல் வேலை.. 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஹிமாச்சல மலைப்பகுதிகளை விழிபிதுங்க சுற்றி திரிந்த சிறுவனை யாரும் திரும்பி கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை.. அவர்தான் இன்று உலகமே அண்ணாந்து பார்க்கும் நம் பிரதமர் நரேந்திர மோடி!

    அன்றைய நிலை வேறு.. இன்றைய நிலை வேறு.. விஸ்வரூபமாக உயர்ந்து நிற்கிறார் நரேந்திர மோடி! பாஜக என்ற கட்சியை இந்தியாவே சரியாக அறியாதபோது, தொண்டனாக தன்னை 34 வருஷங்களுக்கு முன்பு மோடி தன்னை இணைத்து கொண்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!

    1967-ல் அவருக்கு பிடிக்காமலேயே ஒரு கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார்கள். அதனால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதற்கு பிறகுதான் கட்சியில் வேகமாக செயல்பட துவங்கினார்.

    விக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்!விக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்!

    மாநில முதல்வர்

    மாநில முதல்வர்

    1971-ல்தான் ஆர்எஸ்எஸ்-ல் அவரது பணிகள் வேகம் எடுத்தன. இம்மியளவும் தன் கொள்கையை மாற்றி கொள்ளாத போக்கினால்தான், கட்சி இவரை வாரி அணைத்து கொண்டது. ஆனால் பொறுப்புகள் வந்து சேர்ந்ததோ 1985-ல்தான்! 2001-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். பாஜகவின் பொதுச்செயலாளர், உடனே மாநில முதல்வர் என அந்தஸ்துகளும், பதவிகளும் விறுவிறுவென உயர்ந்தன.

    டீக்கடை

    டீக்கடை

    கடுமையான உழைப்பால் தன்னை மெருகேற்றி கொண்டதன் பலனை கட்சியில் மெதுவாக அனுபவிக்க தொடங்கினார் மோடி. அதன் பலனை கொஞ்சம் கொஞ்சமாக ருசிக்க தொடங்கினார். அதே குஜராத்தின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். இதற்கு சாட்சிதான் பல டீக்கடைகளுக்கு "நமோ டீக்கடை" என்று அவரால் சுண்டி இழுக்கப்பட்டவர்கள் பெயர் வைத்தார்கள்.

    இந்திரா காந்தி

    இந்திரா காந்தி

    ஆனால் 2014-ல் புதிய சக்தியாக மோடி உருவெடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எங்கோ மூலையில் ஒட்டிக் கொண்டு கிடந்த பாஜக என்ற கட்சியை நாடெங்கும் உச்சரிக்க வைத்து...உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றார்! இதற்கு முன்பு பண்டித நேரு, இந்திரா காந்தியே உலக அளவில் புகழ்வாய்ந்த் தலைவர்களாக விளங்கினார்கள். இதற்கு அடுத்து மோடி என்று ஆனது! நேருவின் பாணியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியை ரேடியோவில் பேசி மக்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தி கொண்டார்.

    அறிவிப்புகள்

    அறிவிப்புகள்

    அதிரடி அறிவிப்புகளால் மக்களை நிலைகுலைய வைத்தவர் என்ற அடையாளத்தையும் சுமந்துள்ள மோடி, சர்ச்சைகளின் நாயகன் என்ற பெயரையும் பெற தவறவில்லை. அதனால்தான் இன்றுவரை, அதீதப்படியான இந்துத்துவா கொள்கை, சிறுபான்மையினர் நசுக்கப்படுதல், விவசாயிகள் நலன் பாதிப்பு போன்றவை மோடியின் உயரத்தை கீழே இறக்கக்கூடிய சமாச்சாரங்களாக கறைபடிந்தே உள்ளன.

    கள்ள நோட்டு

    கள்ள நோட்டு

    ஆனால், கள்ளநோட்டு ஒழிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் இந்தியாவுக்கு முதலீடு என... சர்வதேச அளவிலான பெருமையாகட்டும், 80 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, எல்லா கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, என உள்ளூர் திட்டங்களாட்டும்.. எல்லாமே மோடி பெயரை தாங்கி நிற்கின்றன.

    நோ டென்ஷன்

    நோ டென்ஷன்

    மடிப்புகள், கசங்கல்கள் இல்லாத நீட்டான டிரஸ் அணிவதுகூட மற்றவரைகளை ஈர்க்கும் விதமாகவே உள்ளது! யார் எவ்வளவு திட்டினாலும் அதை ஆத்திரம், ஆவேசத்தால் அணுகாதவர்! டென்ஷன் என்பதோ, பதட்டம் என்பதோ தென்பட்டதே இல்லை. உச்சபட்சமாக முகம் வெளிறி காணப்படும். அவ்வளவுதான்.. மற்றபடி ஒரு ஸ்மைல்தான்! எப்போதுமே ஒருவித நாகரீக அரசியல்வாதியாகவே தன்னை எப்போதும் முன்னிறுத்தி கொள்ளும் இந்த ஏழைத்தாயின் மகன் நீடூடி வாழ நாட்டு மக்களின் வாழ்த்துக்கள்!

    English summary
    Prime Minister Narendra Modis 69th Birthday today and BJP members arer celebrating
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X