டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமரின் தொடர் தவறுகள் நாட்டின் ஆணி வேரையே அசைத்துள்ளது... ராகுல் காட்டம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: ''பிரதமரின் தொடர் தவறுகள் நாட்டின் ஆணி வேரையே அசைத்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசு செயல்படாமல் இருந்த காரணத்தினால் இன்று சீனா நம் மீது முரட்டுத்தனமான நடவடிக்கை எடுக்கத் தூண்டியுள்ளது'' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டு நடப்பு குறித்து தினமும் ஒரு வீடியோ பதிவிடப் போவதாக முன்பு ராகுல் காந்தி அறிவித்து இருந்தார். அதுபோல் இன்று தனது டிவிட்டரில் இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டு கால பாஜகவின் ஆட்சி, பொருளாதாரம், வெளிநாட்டுக் கொள்கைகள், அண்டை நாடுகளுடனான உறவுகள் என்று பல்வேறு விஷயங்களை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இன்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

PMs constant blunders and indiscretions have fundamentally weakened India and left us vulnerable says Rahul Gandhi

அந்த வீடியோ பதிவில், ''பிரதமரின் தொடர்ச்சியான தவறுகள், கண்மூடித்தனமாக செயல்கள் நாட்டின் ஆணி வேரையே அசைத்துள்ளது. இது நம்மை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த உலகில் சாதனைகளை மேற்கொள்ள வெற்று வார்த்தைகள் போதுமானதாக இல்லை.

இந்தியா மீது முரட்டுத்தனமான நடவடிக்கை எடுக்க சீனாவை எது தூண்டியது. எந்த தருணத்தில் இந்தியா போன்ற நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சீனா முடிவு செய்தது.

ஒரு நாடு, அந்த நாடு எடுக்கும் வெளியுறவுக் கொள்கைகள், அதன் பொருளாதாரம், அண்டை நாடுகளுடனான உறவு மற்றும் மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக இவை எல்லாவற்றிலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் அமெரிக்கா, ரஷ்யாவுடன் இந்தியா ராஜதந்திர உறவுகளை கொண்டிருந்தது. ஆனால், தற்போது, வர்த்தக பரிமாற்ற உறவுகளை மட்டுமே கொண்டுள்ளது. இந்த ராஜதந்திர உறவுகள் மூலம் நட்புறவு நாடுகளுடன் முன்பு இந்தியா அரசியல் ராஜதந்திரங்களில் பங்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால், இன்று நிலைமை அவ்வாறு இல்லை.

முன்பு இந்தியாவுடன் நட்பு நாடுகளாக இருந்த நேபாளம், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளுடன் மோடியின் அரசு கோபத்தை மட்டுமே தற்போது காட்டிக் கொண்டுள்ளது.

நமது பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரமாக விரிந்து கொண்டு இருந்தது. செல்லும் அளவிற்கு உயர்ந்து வந்தது. ஆனால், தற்போது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமடைந்துள்ளது. வேலையின்மை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர், சொரிமுத்து ஐயனார் கோவில்களில் ஆடி அமாவாசை விழா ரத்துதிருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர், சொரிமுத்து ஐயனார் கோவில்களில் ஆடி அமாவாசை விழா ரத்து

பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசிடம் இருந்து பெரிய உந்துதல் தேவை என்று தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம். பொருளாதாரத்தில் நெருப்பு மாதிரி இருக்க வேண்டும், சிறுதொழில்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால், மோசமான நிலையில் நமது பொருளாதாரம் உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக செயல்பட சீனாவை இந்த விஷயங்கள்தான் அழுத்தம் கொடுத்து இருக்க முடியும், ஒன்று சீர்குலைந்த இந்திய பொருளாதாரம், தோல்வி அடைந்த வெளிநாட்டுக் கொள்கைகள், அண்டை நாடுகளுடனான கசப்பான உறவுகள் ஆகியவைதான் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க சரியான தருணம் என்று சீனாவை தூண்டி இருக்க முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
PM's constant blunders and indiscretions have fundamentally weakened India and left us vulnerable saysPM's constant blunders and indiscretions have fundamentally weakened India and left us vulnerable says Rahul Gandhi Rahul Gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X