டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் தமிழகம் வருகை: அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமரின் தமிழகம் வருகைக்கு அரசியல் கட்சியினர் மத்தியிலும் வரவேற்பும், எதிர்ப்பும் காணப்படுகிறது.

பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நாராயண திருப்பதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பிரதமரின் வருகைக்கு ஆதரவு தெரிவித்து டுவிட் போட்டு வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் பிரதமரின் வருகையை எதிர்த்து டுவிட் போட்டுள்ளார்.

தமிழகம் வரும் மோடி

தமிழகம் வரும் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை தமிழகம் வருகிறார். இதற்காக அவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு விட்டார். இன்று காலை சென்னை நேரு உள்நாட்டு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார் பிரதமர் மோடி.

டுவிட்டர் டிரெண்டிங்

டுவிட்டர் டிரெண்டிங்

சென்னை வரும் பிரதமருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழக்கமாக சென்னை வரும்போதெல்லாம் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். கடும் வரவேற்பும் கொடுக்கபப்டும். வெல்கம் மோடி மற்றும் கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக்குகள் நேற்று மலையில் இருந்தே டிரெண்டாகி வருகிறது.

பாஜக வரவேற்பு

பாஜக வரவேற்பு

இந்த நிலையில் பிரதமரின் வருகைக்கு அரசியல் கட்சியினர் மத்தியிலும் வரவேற்பும், எதிர்ப்பும் காணப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமரின் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், உலகின் மருந்தகமாக இந்தியாவை உருவாக்கி பல நாடுகளின் துயர் துடைத்த ஒப்பில்லா உலக தலைவராக விளங்கும் பிரதமர் மோடியை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு

விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு

இதேபோல் பாஜகவின் எச்.ராஜா, வானதி சீனிவாசன், நாராயண திருப்பதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பிரதமரின் வருகைக்கு ஆதரவு தெரிவித்து டுவிட் போட்டு வருகின்றனர். பிரதமரின் வருகைக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் எதிப்பும் தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் வெளியிட்ட பதிவில், 'வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் ஒப்படைத்ததால் #GoBackModi என்று கூறியுள்ளார். இதேபோல் பலரும் பிரதமர் வருகைக்கு எதிப்பு தெரிவித்து உள்ளனர்.

English summary
The Prime Minister's visit to Tamil Nadu has been welcomed and opposed by political parties
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X