டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ட்ராங் மேன் இமேஜ்ஜில் பதவிக்கு வந்தவர் மோடி...இதுதான் இந்தியாவின் வீக்னஸ்...ராகுல் காந்தி!!

Google Oneindia Tamil News

டெல்லி: போலியான ஸ்ட்ராங் மேன் இமேஜில் ஆட்சிக்கு வந்தவர் பிரதமர் மோடி. அதுதான் அவருடைய மிகப் பெரிய பலமாக இருந்தது. அதுதான் இன்று இந்தியாவுக்கு மிகப் பெரிய வீக்னஸ் ஆகவும் இருக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்.

காங்கிர தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டு, நடப்பு குறித்து தினமும் ஒரு வீடியோ வெளியிடப் போவதாக அறிவித்து இருந்தார். கடந்த வாரம் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிலும் பிரதமர் மோடியை விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் இன்று அவரது ட்விட்டரில் இரண்டாவது வீடியோவை வெளியிட்டுள்ளார். அதிலும், மோடியை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

PM with fake image to come to power its his biggest strength now India’s biggest weakness says Rahul Gandhi

இன்று வெளியான இரண்டாவது வீடியோவில், ''சீனர்கள் நமது இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எதையும் ஆலோசிக்காமல் செய்ய மாட்டார்கள். அவர்கள் ஒரு வரை படத்தை தங்களுக்குள் தீர்மானித்துக் கொள்கின்றனர். அதற்குத் தகுந்தவாறு உலக வரை படத்தை நிர்ணயிக்கின்றனர். சீனா அமைத்து வரும் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் இன்று அமெரிக்காவையே உலக அரங்கில் பின்னுக்குத் தள்ளியுள்ளது. எரிவாயு மற்றும் வர்த்தகத்தில் இவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதித்த ஐக்கிய அரபு அமீரகம்.. செவ்வாய்க்கு செல்லும் ஆர்பிட்டர்.. வெற்றிகரமாக ஏவப்பட்ட ராக்கெட்.. செமசாதித்த ஐக்கிய அரபு அமீரகம்.. செவ்வாய்க்கு செல்லும் ஆர்பிட்டர்.. வெற்றிகரமாக ஏவப்பட்ட ராக்கெட்.. செம

எல்லை ராஜ தந்திரத்தில், கல்வான், டெம்சோக், பாங்காங் எதுவாக இருக்கட்டும், இந்த இடங்களில் தங்களது நிலைப்பாட்டை நிலை நிறுத்திக் கொள்ள திட்டமிடுகின்றனர். பின்னர் அண்டை நாடுகளுக்கு இடஞ்சல் கொடுக்கின்றனர். இதையே தான் பாகிஸ்தானுடன் இணைந்து செய்கின்றனர். இதை வெறும் எல்லை பிரச்சனையாக எடுத்துக் கொள்ள முடியாது. பிரதமரின் மீது அழுத்தம் கொடுக்கவே இதை சீனா செய்கிறது.

காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுடன் இணைந்து எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவுக்கு இடஞ்சல் கொடுக்க முயற்சிக்கின்றனர்.

இந்தியாவில் வலுவான தலைவராக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் எண்ணம். அவரது 56 இஞ்ச் இமேஜை காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகிறார். இதை சீனா நன்றாகவே அறிந்து வைத்து இருக்கிறது. அவரது இமேஜை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால், அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று நினைக்கின்றனர். நாங்கள் சொல்வதை செய்யாவிட்டால் உங்களது இமேஜை அழிப்போம் என்று சீனா சொல்லி வைத்தே செய்கிறது. எல்லை விஷயத்தில் தன்னுடைய இமேஜை கருதாமல் பிரதமர் செயல்பட்டு இருக்க வேண்டும். இன்று சீனா நமது இடத்தில் அமர்ந்து கொண்டுள்ளனர். இதுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
PM with fake strongman image to come to power its his biggest strength now India’s biggest weakness says Rahul Gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X