டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் (POK) இந்தியாவைச் சேர்ந்தது என்றும், அந்த பகுதி மீது ஒரு நாள் இந்தியா அதிகார வரம்பை செலுத்தப்போவது உறுதி என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதிரடியாக தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யன் ஜெய்சங்கர் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:

PoK part of India, will have control one day: Jaishankar

PoKஇல் நமது நிலைப்பாடு எப்போதுமே ஒரே மாதிரி இருந்து வருகிறது, எப்போதும் மிகவும் தெளிவாக இருக்கிறது. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும், அதன் மீது நமக்கு முழு அதிகார வரம்பு ஒருநாள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமாகத்தான் இருக்குமே தவிர நமது காஷ்மீர் பற்றியாக இருக்காது.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்த நாடு முதலில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது குறித்து பாகிஸ்தான் நல்ல நல்ல வார்த்தைகளை மட்டுமே நமக்கு பரிசாக அளிக்கிறது, ஆனால் பயங்கரவாத நெட்வொர்க்கை அகற்றுவதில் எந்த செயல்பாடும் இல்லை.

காஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்புகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு

இந்தியாவின் குரல் இப்போது உலக அரங்கில் அதிகம் கேட்கப்படுகிறது, அது ஜி 20 அல்லது காலநிலை மாநாடு என எதுவாக இருந்தாலும் சரிதான். அரசு இந்த பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில், அண்டை நாடுகளுடான உறவை மேம்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி, மாலத்தீவு, இலங்கை, பூட்டான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினை, 370 வது பிரிவை நீக்குவது போன்ற விவகாரங்கள், இந்தியா தரப்பிலிருந்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

English summary
External Affairs Minister S Jaishankar on Tuesday said that Pakistan-occupied Kashmir has always been part of India and some day the country will have "physical jurisdiction" over it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X