டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய போலீஸ்.. கசிந்த சிசிடிவி ஆதாரம்.. கொடுமை!

டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி போலீஸ் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் குறித்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய போலீஸ்.. CCTV - வீடியோ

    டெல்லி: டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி போலீஸ் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் குறித்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரமாக போராட்டம் நடத்தினார்கள். இந்த சட்டம் வந்தால் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றார்கள். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.

    தடியடி நடத்தினார்கள்

    தடியடி நடத்தினார்கள்

    இந்த போராட்டம் நடந்த போது, அங்கு வந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அதேபோல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நூலகம் வரை சென்று கூட போலீசார் மாணவர்களை தாக்குதல் நடத்தினார்கள். லத்திகளை கொண்டு அங்கிருந்த மாணவர்களை மோசமாக தாக்கியுள்ளனர். அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள்.

    வழக்கு எப்படி

    வழக்கு எப்படி

    அதேபோல் வானத்தை நோக்கியும் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். பெண் மாணவிகள் பலரும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்ததனர். சில மாணவர்களுக்கு கால், கைகள் உடைந்தது . இந்த கலவரமும், போலீஸ் தாக்குதலும் பெரிய சர்ச்சையானது. அதேபோல் இங்கு மாணவர்களை தாக்கவில்லை, துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று போலீஸ் மறுத்து வந்தது. இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. அதேபோல் இது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களும் காணாமல் போனது.

    வீடியோ எப்படி

    வீடியோ எப்படி

    தற்போது இந்த போலீஸ் தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ ஒன்றை ஜாமியா மிலியாவின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது 49 நொடி வீடியோ ஆகும் இது. ஜாமியா மிலியாவில் உள்ள எம். பில் லைப்ரரி படிக்கும் மையத்தில் உள்ள சிசிடிவி வீடியோ ஆகும் இது. ஜனவரி 15ம் தேதி மாலை 6 மணிக்கு பின் இது பதிவாகி உள்ளது. இதில் அங்கு படித்துக் கொண்டு அமைதியாக இருக்கும் மாணவர்களை போலீசார் தாக்கி உள்ளனர்.

    போலீஸ் தாக்குதல்

    போலீஸ் கவச உடையுடன் உள்ளே வந்து, அங்கிருந்த மாணவர்களை மிக மிக மோசமாக தாக்கி இருக்கிறார்கள். போராடாமல், அமைதியாக படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்களை இப்படி போலீசார் தாக்கி உள்ளனர். லத்திகள் மூலம் படிக்கும் மாணவர்களை முரட்டுத்தனமாக போலீசார் தாக்கியது வீடியோவில் பதிவாகி உள்ளது. போலீசின் முந்தைய வாதம் இதன் மூலம் பொய் என்று நிரூபணம் ஆகி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

    மிக மோசமான தாக்குதல்

    மிக மோசமான தாக்குதல்

    இந்த தாக்குதலில் மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த வீடியோ இணையத்தை மொத்தமாக உலுக்கி உள்ளது. இதனால் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது அந்த கட்சிக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. தற்போது மீண்டும் பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீடியோ வெளியாகி உள்ளது. டெல்லி போலீஸ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் உள்ளது. உள்துறை அமைச்சராக அமித் ஷா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Police attack on Jamia Milia students: Protesters release a Video of police attacking students inside the study hall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X