டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்கள் அமைதியை விரும்பினோம்... ஆனால் விவசாயிகள் எல்லை மீறி விட்டனர்... போலீசார் குற்றச்சாட்டு!

Google Oneindia Tamil News

டெல்லி: ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பாதையில் செல்லுமாறு விவசாயிகளிடம் விடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Recommended Video

    டெல்லிக்குள் நுழைய முயற்சித்த விவசாயிகள்… கண்ணீர் புகை குண்டு வீச்சு…. நீடிக்கும் பதற்றம்..!

    குடியரசு தினத்தன்று இது அமைதியான எதிர்ப்பு அல்ல என்றும் போலீசார் கூறினார்கள்.

    police says We wanted peace but the farmers had crossed the border

    வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறி உள்ளது. சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் தடுப்புகளை போலீசார் மீது எறிந்த விவசாயிகள் முன்னோக்கி சென்றதால் கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது.

    போலீசார் தடியடி நடத்தியதால் டெல்லி முழுவதும் வன்முறைக்களமாக உள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் விவசாயிகள் தடையை மீறி செல்கின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறை தொடர்பாக விவசாயிகளும், போலீசாரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சில அரசியல்வாதிகள்தான் வன்முறையை தூண்டி விட்டனர்... அவங்க யாருனு தெரியும்... விவசாயிகள் பகீர்! சில அரசியல்வாதிகள்தான் வன்முறையை தூண்டி விட்டனர்... அவங்க யாருனு தெரியும்... விவசாயிகள் பகீர்!

    இது தொடர்பாக டெல்லி நாங்லோய் நகரில் ஷாலினி சிங் என்ற பெண் போலீஸ் அதிகாரி கூறியதாவது:- டிராக்டர் பேரணி தொடங்கும் வேளையில் காலையியில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பாதையில் செல்லுமாறு விவசாயிகளிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம், அவர்களில் சிலர் போலீசாரின் தடுப்புகளை உடைத்து, காவல்துறையினரைத் தாக்கினர். தொடர்ந்து அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தடியடியும், கண்ணீர்புகை குண்டும் வீசப்பட்டது.

    தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட உதவுமாறு உழவர் சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் விவசாயிகள் எல்லை மீறி விட்டனர். குடியரசு தினத்தன்று இது அமைதியான எதிர்ப்பு அல்ல என்று அவர் கூறினார். பல்வேறு போலீசாரும் இதே கருத்தை தெரிவித்தனர்.

    English summary
    We had already asked the farmers to follow the approved route. But police said they were involved in the violence
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X