டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெரினாவை மிஞ்சிய போராட்டம்.. களமிறங்கிய லட்சம் பேர்.. கொதிக்கும் வடகிழக்கு.. போலீஸ் துப்பாக்கி சூடு!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ... அஸ்ஸாம், திரிபுராவில் ராணுவம் குவிப்பு

    டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் இந்த மசோதா சட்டமாகும்.

    தற்போது இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அருணாசலப்பிரதேசம். இந்த 7 மாநிலங்களில்தான் போராட்டம் நடந்து வருகிறது

    நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு.. 10 கயிறுக்கு ஆர்டர்.. 2 ஹேங்மேன் ரெடி.. பரபரக்கும் திகார் சிறை நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு.. 10 கயிறுக்கு ஆர்டர்.. 2 ஹேங்மேன் ரெடி.. பரபரக்கும் திகார் சிறை

    நான்கு மோசம்

    மிக முக்கியமாக அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஆகிய நான்கு மாநிலங்களில் போராட்டம் உச்ச நிலையை அடைந்துள்ளது. வடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்பு சார்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்புதான் இதில் முன்னிலை வகிக்கிறது. மற்ற பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

    என்ன தாக்குதல்

    இந்த போராட்டம் காரணமாக அங்கு 2 நாட்களாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் போது போலீசார் அங்கிருந்த மக்களை கலைந்து செல்ல வைப்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இன்னொரு பக்கம் மக்கள் மீது போலீசார் கடுமையாக தாக்குதலும் நடத்தினார்கள். இதனால் பல மக்கள் காயம் அடைந்தனர்.

    லத்தி சார்ஜ்

    இந்த போராட்டத்தில் 7 மாநிலங்களையும் சேர்த்து 1 லட்சம் பேர் வரை கலந்து கொண்டு இருக்க வாய்ப்புள்ளது . அங்கு போராடும் பெண்கள், ஆண்கள் என்று வயது, பால் வித்தியாசம் பார்க்காமல் பலர் மீது போலீசாரால் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு தற்போது ராணுவமும், மத்திய ரிசர்வ் படைகளும் குவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் கவுகாத்தியில்தான் அதிகமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    என்ன நீக்கம்

    இந்த போராட்டத்தை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தாத காரணத்தால் கவுகாத்தி கமிஷ்னர் தீபக் குமார் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்னா பிரசாத் குப்தா புதிய கமிஷ்னராக தேர்வாகி உள்ளார்.

    என்ன போக்குவரத்து

    இந்த போராட்டம் காரணமாக அசாம் மற்றும் திரிபுராவில் மொத்தமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு விமானம் பறக்க தடை செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் ரயில்களும் மொத்தமாக நிறுத்தப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது.

    மெரினாவை மிஞ்சியது

    தற்போது இந்த போராட்டம் குறித்த பல்வேறு வீடியோக்கள் இணையம் முழுக்க வெளியாகி உள்ளது. மெரினா போராட்டத்தை மிஞ்சும் அளவிற்கு மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Police shoot out in the North East People protest against Citizenship Amendment Bill.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X