டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுக்கடை திறப்பு.. ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு நிலைப்பாடு.. மக்களை குழப்பும் அரசியல் கட்சிகள்!

இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகளை திறப்பதில் அரசியல் கட்சிகள் மிகவும் குழப்பமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகளை திறப்பதில் அரசியல் கட்சிகள் மிகவும் குழப்பமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

Recommended Video

    Rajini says AIADMK will never return to power again if it opens TASMAC

    நாடு முழுக்க மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதனால் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தில் அனைத்து மண்டலங்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.

    ஆனால் சென்னை ஹைகோர்ட் உத்தரவால் தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது. மாநிலங்களுக்கு மாநிலம் கட்சிகளின் நிலைப்பாடு இதில் மாறுபடுகிறது.

    அமைச்சர் எம்.சி. சம்பத்துக்கு எதிராக அவதூறு- வாட்ஸ் அப் அட்மின்களுக்கு முன் ஜாமீன் மறுப்புஅமைச்சர் எம்.சி. சம்பத்துக்கு எதிராக அவதூறு- வாட்ஸ் அப் அட்மின்களுக்கு முன் ஜாமீன் மறுப்பு

    டெல்லி

    டெல்லி

    உதாரணமாக டெல்லியில் மதுக்கடைகளை திறப்பதாக அம்மாநில அரசு ஆம் ஆத்மி அறிவித்தது. ஆனால் அங்கு பாஜக இதை கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸ் கட்சியும் இதை மிக கடுமையாக எதிர்த்தது. ஒரு பக்கம் பாஜக இதை எதிர்த்து இருந்தாலும் இன்னொரு பக்கம் உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சி நடத்தும் அரசு, அங்கு மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது. இது பெரிய விமர்சனங்களை சந்தித்தது.

    காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது

    காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது

    அதே சமயம் உத்தர பிரதேசத்தில் மதுக்கடைகளை திறக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மதுக்கடைகளை திறந்தது. அங்கு மதுக்கடைகளை திறக்க ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இன்னொரு பக்கம் மகாராஷ்டிராவில் சிவசேனா மூலம் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதற்கு அங்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    தமிழகம் எப்படி

    தமிழகம் எப்படி

    இன்னொரு பக்கம் தமிழகத்தில் பார்த்தால் அதிமுக மதுக்கடைகளை திறந்துள்ளது. அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் பாண்டிசேரியில் மதுக்கடைகளை காங்கிரஸ் திறக்க அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் கர்நாடகாவில் பாஜக மதுக்கடைகளை திறந்துள்ளது. அதற்கு அங்கு காங்கிரஸ் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    வேறுபாடு நிலைப்பாடு

    வேறுபாடு நிலைப்பாடு

    ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு கட்சியும் வேறு வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஒரு மாநிலத்தில் மதுவை எதிர்க்கும் கட்சி இன்னொரு மாநிலத்தில் மதுவை ஆதரித்து குரல் கொடுத்து இருக்கிறது. ஒரு மாநிலத்தில் மதுவால் கொரோனா பரவும் என்று கூறும் கட்சி இன்னொரு மாநிலத்தில் ஆளும் கட்சி என்பதால் மதுக்கடைகளை திறந்து உள்ளது. கட்சி வேறுபாடு இன்றி இப்படி நடந்துள்ளது.

    மக்களுக்கு குழப்பம்

    மக்களுக்கு குழப்பம்

    அரசியல் கட்சிகளின் இந்த நிலைப்பாடு மக்களை குழப்பி உள்ளது. அரசியல் கட்சிகளின் உண்மையான கொள்கைதான் என்ன என்று மக்கள் குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையில் அரசியல் கட்சிகளுக்கு மது விலக்கு அல்லது மது எதிர்ப்பில் ஏதாவது கொள்கை இருக்கிறதா அல்லது அரசியல் லாபத்திற்காக, மக்களிடம் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று இப்படி செய்கிறார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Political parties stand on booze in the states confuse people a lot in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X