டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்னுத்தாய்க்கு 25 வயதே பூர்த்தியாகவில்லை.. வேட்புமனு ஏற்கப்பட்டு சின்னமும் ஒதுக்கப்பட்டுவிட்டதே!

Google Oneindia Tamil News

Recommended Video

    Tenkasi Candidate: 25 வயது கூட ஆகவில்லை ஆனால் வேட்புமனுவை ஏற்ற தேர்தல் ஆணையம்- வீடியோ

    டெல்லி: தென்காசி வேட்பாளர் பொன்னுத்தாய்க்கு 25 வயதே பூர்த்தியாகவில்லை. ஆனால் வேட்புமனு ஏற்கப்பட்டு சின்னமும் ஒதுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் மிக முக்கியமான தொகுதி என்றால் அது தென்காசி தொகுதிதான். இங்கு கள நிலவரமே பரபரப்பாக உள்ளது.

    இங்கு போட்டியிடும் திமுக சுமார் 28 ஆண்டுகள் கழித்து நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த முறை அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    3 பொன்னுத்தாய்கள் போட்டி

    3 பொன்னுத்தாய்கள் போட்டி

    அமமுக சார்பில் பொன்னுத்தாய் என்பவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அமமுக பொன்னுத்தாய் இல்லாமல் சுயேச்சைகளாக மேலும் 3 பொன்னுத்தாய்கள் போட்டியிடுவதால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

    வேட்பாளர்கள்

    வேட்பாளர்கள்

    இந்த நிலையில் தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு கூறுகிறது.

    சின்னம்

    சின்னம்

    ஆனால் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கோ. பொன்னுத்தாய்க்கு 24 வயதுதான் ஆகிறது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு, சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சர்ச்சை

    சர்ச்சை

    இதுபோன்ற முரணான தகவல்கள் இருந்தால் அவை வேட்பு மனு சரிபார்த்தலின் போது நிராகரிக்கப்படும். ஆனால் இந்த வேட்பாளரின் வேட்புமனுவை அதாவது வயதை கூட சரிபார்க்காமல் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Tenkasi lok sabha independent candidate Ponnuthai's nomination accepted by Election Commission though she is 24 years old.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X