டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படியே இருக்க முடியாது.. என் நண்பனை விட்ருங்க.. ஏதாவது தீர்வு காணுங்க.. பூஜா பேடி குரல்

உமர் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும் என்று பூஜா பேடி ட்வீட்போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: உமர் அப்துல்லாவுக்காக அவரது தோழி ஒருவர் குரல் கொடுத்துள்ளார். வீட்டுக் காவலிலிலிருந்து உமரை விடுவிக்க வேண்டும் என்று தனது மனசில் இருப்பதை அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும். விடுவிக்கும் என நம்புகிறேன் என்று உமர் அப்துல்லாவின் தோழியும், மாடலும், நடிகையுமான பூஜா பேடி கூறியுள்ளார்.

பூஜா பேடியும், உமர் அப்துல்லாவும் ஒன்றாகப் படித்தவர்கள் ஆவர். அந்த வரிசையில் தனது நண்பனுக்காக குரல்கொடுத்துள்ளார் பூஜா பேடி. இவர் நடிகர் கபீர் பேடியின் மகள் ஆவார்.

பெயரை எப்படி எழுதுவீர்கள் என்றார்கள்.. கட்சி பதவியை ராஜினாமா செய்ய சொன்னார்கள்: தழுதழுக்கும் தமிழிசைபெயரை எப்படி எழுதுவீர்கள் என்றார்கள்.. கட்சி பதவியை ராஜினாமா செய்ய சொன்னார்கள்: தழுதழுக்கும் தமிழிசை

தலைவர்கள்

தலைவர்கள்

370வது சட்டப் பிரிவு நீக்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதல் உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் இருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவரது அப்பா பரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோரும் கூட வீட்டுக் காவலில்தான் உள்ளனர். இவர்களை விடுவிப்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை.

அமித்ஷா

அமித்ஷா

இந்த நிலையில்தான் பூஜா பேடி குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சில பத்திரிகையாளர்களை டேக் செய்துள்ளார். அதில் உமர் விடுதலையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

படித்தவர்

படித்தவர்

அவர் கூறுகையில், " உமர் அப்துல்லா கைதாகி ஒரு மாதமாகி விட்டது. அவர் என்னுடன் படித்தவர். எனது குடும்ப நண்பர். 3 தலைமுறைகளாக இந்த நட்பு தொடர்கிறது. அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்.

வலியுறுத்தல்

அரசு அவரை விடுவிக்கும் என நம்புகிறேன். இந்த கைது நீடித்துக் கொண்டே இருக்க முடியாது. ஏதாவது தீர்வு கண்டாக வேண்டும் என்று பூஜா பேடி வலியுறுத்தியுள்ளார். பூஜா பேடி மட்டுமல்ல மேலும் பலரும் கூட தொடர்ந்து இவர்களின் விடுதலையை வலியுறுத்திக் கொண்டுதான் உள்ளனர்.

தெளிவு

தெளிவு

விடுதலைதான் எப்போது என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் அளவுக்கு காஷ்மீரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

English summary
"I hope the Govt puts a plan in place soon for his release as this clearly can't go on forever! Solutions MUST be found," says Actress Pooja Bedi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X