டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூத்த தலைவர்களின் அரும்பணிகளால் சாத்தியமான வெற்றி.. அத்வானியிடம் ஆசி பெற்ற மோடி கருத்து

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்ததை அடுத்து, பிரதமர் மோடி அக்கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

Possible success by senior leaders outstanding works.. Modi comment after got blessing from Advani

டெல்லியில் உள்ள அத்வானியில் இல்லத்திற்கு காலை சென்ற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரும், அவரை சந்தித்து தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்து ஆசி பெற்றுள்ளனர்.

தாம் அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படத்தை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதோடு சேர்த்து இவர்களைப் போன்ற மிக உயர்ந்த தலைவர்கள் முன்னர் ஆற்றிய அரும்பணிகளால் தான், இன்று பாஜகவின் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா!25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா!

அத்வானியை சந்தித்த பிறகு கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியையும், மோடி மற்றும் அமித் ஷா சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். இந்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ள மோடி, இந்திய கல்வியை மேம்படுத்துவதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

மேலும் எப்போதுமே பா.ஜ.கவை வலுப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடனே பணியாற்றியுள்ளார். என்னையும் சேர்த்து பலரது வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார் என ஜோஷியை பற்றி மோடி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு, அவர்களது வயதை காரணம் காட்டி இந்த முறையும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்தியாவில் ஒரே கட்சி.. திமுக மட்டும்தான் இனி போட்டி.. பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!இந்தியாவில் ஒரே கட்சி.. திமுக மட்டும்தான் இனி போட்டி.. பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!

அத்வானி 6 முறை வெற்றி பெற்ற குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் இந்த முறை அமித் ஷா போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார்

கட்சி தலைமை மீது மூத்த தலைவர்கள் அதிருப்த்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அத்வானி மற்றும் ஜோஷியை பிரதமர் மோடி மற்றம் அமித் ஷா இருவரும் நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi got blessing from senior leaders LK Advani and Murali Manohar Joshi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X