டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா 3ஆம் அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுவார்களா? உலக சுகாதார அமைப்பின் விளக்கம் இதுதான்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா 3ஆம் அலையில் இளைஞர்களைக் காட்டிலும் சிறார்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Recommended Video

    புதிய Lambda Corona பற்றி தெரியுமா? 29 நாடுகளுக்கு பரவிய New Variant | OneIndia Tamil

    இந்தியாவில் தற்போது தான் 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. இந்நிலையில், விரைவில் கொரோனா 3ஆம் அலை ஏற்படும் என்றும் அதில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின.

    இது குறித்து உலக சுகாதார அமைப்பும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் ஆய்வு நடத்தியது. அதன்படி ஐந்து மாநிலங்களிலுள்ள 10 ஆயிரம் பேரிடம் செரோ சர்வே நடத்தப்பட்டது.

    உலகத்தில் குறைந்து வரும் கொரோனா பரவல் 16.26 கோடி பேர் மீண்டனர் - 1.16 கோடி பேர் சிகிச்சை உலகத்தில் குறைந்து வரும் கொரோனா பரவல் 16.26 கோடி பேர் மீண்டனர் - 1.16 கோடி பேர் சிகிச்சை

    சிறார்களை அதிகம் பாதிக்காது

    சிறார்களை அதிகம் பாதிக்காது

    இதில் கொரோனா ஆன்டிபாடிகள் இளைஞர்களைவிடச் சிறார்களிடம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு & டெல்லி எய்ம்ஸ் நடத்திய இந்த செரோ சர்வே முறையில் இளைஞர்களைக் காட்டிலும் குழந்தைகளிடையே ஆன்டிபாடிகள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. எனவே, வரும் காலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டால் அது குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்பில்லை" என அதில் கூறப்பட்டுள்ளது.

    டெல்லிவாசிகள்

    டெல்லிவாசிகள்

    குறிப்பாக தெற்கு டெல்லி பகுதியில் உள்ள 2-17 வயதுடைய சிறார்களில் 73.9% பேரின் உடலில் ஆன்டிபாடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல அப்பகுதியில் இருக்கும் 18+ வயதுடைய 74.8% பேரின் உடலில் ஆன்டிபாடிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது கொரோனா 2ஆம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட டெல்லியின் தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் ஆன்டிபாடிகள் அதிகம் உள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளைத் திறக்கலாம்

    பள்ளிகளைத் திறக்கலாம்

    மேலும் சிறார்களுக்கு மத்தியில் அதிகளவில் ஆன்டிபாடிகள் உள்ளதால் டெல்லியின் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளைத் திறக்கலாம் என இதில் கூறப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும், முதல் அலைக்கு பிந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, அதிகளவிலான மக்களுக்கு ஆன்டிபாடிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் கிராமப்புறங்களில் சிறார்கள் மத்தியில் 87.9 சதவீதமும் 18+ வயதுடையவர்கள் மத்தியில் 90.3 சதவீதமும் ஆன்டிபாடிகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா ஆன்டிபாடிகள்

    கொரோனா ஆன்டிபாடிகள்

    பழங்குடியினர் அதிகம் வாழும் திரிபுரா மாநிலத்தின் கிராமப்புறங்களில் மிகக் குறைந்த அளவாக 51.9 சதவீதம் பேருக்கு ஆன்டிபாடிகள் உள்ளன. ஒட்டுமொத்தமாகக் கிராமப்புற மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, அதாவது 62.3% பேருக்கு கொரோனா ஆன்டிபாடிகள் உள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலோ அல்லது தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டாலோ அவர்களின் உடலில் ஆன்டிபாடிகள் உற்பத்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    World Health Organisation (WHO) and Delhi AIIMS conducted a survey. It says The third possible wave of the coronavirus pandemic is unlikely to affect the children more than the adult population.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X