டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவிலிருந்து மீண்டாலும் சுவாச பிரச்சினை தொடருமாம்.. எச்சரிக்கும் டாக்டர்கள்.. காரணம் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டாலும் நோயாளிகளுக்கு சுவாசப் பிரச்சினைகளால் ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை இருக்கத்தான் செய்கின்றன என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா வைரஸால் இந்தியாவில் 18 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பாதிப்பை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த நோயின் பாதிப்பு குறித்தும் அறிகுறிகள் குறித்தும் நாள்தோறும் ஒரு தகவல்கள் வருவது மக்களை அச்சமடையச் செய்கிறது.

காய்ச்சல், சளி, இருமல், மூச்சு பிரச்சினை ஆகியவை கொரோனா அறிகுறி என சொல்லப்பட்டது. பின்னர் நாக்கில் சுவையின்மை, மூக்கில் வாசனையின்மை உள்ளிட்ட அறிகுறிகளும் கொரோனாவுக்கானது என சொல்லப்பட்டது.

நோயாளிகள்

நோயாளிகள்

இது போல் தினமும் புது தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டாலும் மூச்சு பிரச்சினைகள் இருக்கின்றன என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து நுரையீரல் துறையின் மூத்த மருத்துவர் ராஜேஷ் சாவ்லா கூறுகையில் ஜூன் முதல் வாரத்தில் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் பின்னர் மூச்சு பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.

நுரையீரல்

நுரையீரல்

இதனால் அவருக்கு ஆக்ஸிஜன் தெரபி அவசியமாகிறது. அவர் கடந்த இரு மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவருக்கு நுரையீரல் திசுக்கள் சேதமடைந்ததற்கு சிகிச்சை அளிக்க மாத்திரைகள் வழங்கியும் அவருக்கு ஆக்ஸிஜன் தெரபி அதிக அளவில் கொடுக்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் என்பது நுரையீரலை நாசம் செய்யும் விஷயமாகும்.

நுரையீரல்

நுரையீரல்

கொரோனாவால் நுரையீரலில் உள்ள திசுக்கள் இருக்கமாக இருப்பதாலும் தடிமனாக இருப்பதாலும் நுரையீரல் அதன் பணியை தொடர கடினமாக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் ஆக்ஸிஜன் தேவையாகும். 56 வயது மருத்துவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

கழிவறை

கழிவறை

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்ற நிலையில் ஆக்ஸிஜன் துணையுடன்தான் இன்னமும் சுவாசித்து வருகிறார். அது போல் கரோல் பாக்கை சேர்ந்த 64 வயது தொழிலதிபருக்கு மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் மீண்டுவிட்டார். எனினும் அவர் ஆக்ஸிஜன் உதவியுடன்தான் சுவாசித்து வருகிறார். அவரால் கழிவறைக்கு செல்ல கூட முடியாத சூழல் உள்ளது.

குழப்பமான நிலை

குழப்பமான நிலை

கொரோனா பாதித்தால் உடலின் மற்ற உள்ளுறுப்புகளும் கடும் பாதிப்பை சந்திக்கின்றன. குறிப்பாக மூளை. இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வைரஸ் தொற்றானது, நுரையீரல் செயல்பாட்டை நிறுத்திவிடுகிறது. இதனால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வேளை மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால் அது சுயநினைவில்லாத நிலைக்கோ குழப்பமான நிலைக்கோ உயிரிழக்கவோ நேரிடுகிறது.

வாசனை இழப்பது

வாசனை இழப்பது

மேலும் சுவை மற்றும் வாசனை இழப்பது ஆகியவை அதற்கான நரம்புகள் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு மூளைக்கு பயணமாகி நரம்பியல் தொடர்பான குறைபாடுகளை கொடுக்கிறது என மருத்துவ நிபுணர் தெரிவித்தார். மேலும் மூளையை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது என்றும் தெரிவித்தார்.

English summary
Post Corona patients still not recover from Shortness of breathe as tissues of lungs thickened.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X