டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இனி தபால்துறை வினாத்தாள்.. மத்திய அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தபால் துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் கார்டு (Mail Guard), தபால்காரர் (Postman), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), சார்டிங் அசிஸ்டெண்ட் (Sorting Assistant) போன்ற தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு வினாத்தாள் அந்தந்த மாநில மொழிகளில் (23 மாநில மொழிகளிலும்) வழங்கப்பட்டு வந்தது.

post office recruitment exam will conduct english and hindi only

இந்நிலையில் தபால் துறை பணியிட தேர்வுக்கான படத்திட்டம் கடந்த மே 10ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அந்த அறிவிப்பிலேயே வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனைத்த தலைமை தபால் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், அனைத்து தேர்வுகளுக்கும் தாள் ஒன்று வினாத்தாள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில மொழிகளில் வழங்கப்படாது.

இதன் மூலம் முதன்மைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வை இதற்கு முன்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநில மொழிகளில் எழுதிய தேர்வர்கள் இனி . இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும்.

நீட் தேர்வுக்கு ஆதரவு... விஜயகாந்துக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் வெச்சு செஞ்சுட்டாங்களே! நீட் தேர்வுக்கு ஆதரவு... விஜயகாந்துக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் வெச்சு செஞ்சுட்டாங்களே!

ஆனால் அதே நேரம் இரண்டாம் தாள் தேர்வுக்கான வினாத்தாள்களில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தபால் துறை வேலை வாய்ப்புகளுக்கு நடத்தும் தேர்வுகளில் அனைத்து தாள்களும் 23 மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்த பல ஆண்டு நடைமுறையை மத்திய அரசு மாற்றியுள்ளது.

English summary
post office recruitment exam question paper will give english and hindi only not state language like tamil, telugu, malayalam, kannada etc, order by central govenrment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X