டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வறுமை ஒழிப்பு… காங்கிரசுக்கு எப்பொழுதும் ஆயுதமா?... அருண் ஜெட்லி விளாசல்

Google Oneindia Tamil News

Recommended Video

    வறுமை ஒழிப்பு தான் காங்கிரசுக்கு எப்பொழுதும் ஆயுதமா? - அருண் ஜெட்லி- வீடியோ

    டெல்லி: வறுமை ஒழிப்பை எப்பொழுதும் காங்கிரஸ் ஆயுதமாக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

    ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Poverty Alleviation Is Weapon To Congress Says Arun Jaitley

    இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், நாட்டில் 20% ஏழைக் குடும்பங்கள் ஏற்கனவே மோடி அரசால் பல்வேறு திட்டங்களின் கீழ் 1.06 லட்சம் ரூபாய் பெற்று வருவதாக கூறினார்.

    பெங்களூர் தெற்கு தொகுதி வேட்பாளர்.. பாஜக சஸ்பென்ஸ் ஓவர் பெங்களூர் தெற்கு தொகுதி வேட்பாளர்.. பாஜக சஸ்பென்ஸ் ஓவர்

    ஆனால், ஆண்டுக்கு ரூ. 72,000 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், வறுமை ஒழிப்பை எப்பொழுதும் காங்கிரஸ் ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

    காங்கிரஸ் கட்சியை போன்று இந்திய மக்களை எவரும் ஏமாற்றியது கிடையாது என்றும், தேர்தலுக்கு முன்னர், ஏழைகளுக்கு நேரடியாக நன்மை பயக்கும் ஆதார் மசோதாவை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்த்தது. அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் எதிர்த்தனர். இப்பொழுது பணம் வங்கிகளில் நேரடியாக வழங்கப்படும் என்று அவர்களே (காங்கிரஸ்) கூறி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

    1971 ம் ஆண்டு 'வறுமையை ஒழிப்போம்' என்ற முழக்கத்தோடு இந்திரா காந்தி தேர்தலை எதிர்கொண்டதாகவும், ஆனால் அதன்பின் வறுமையை ஒழிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அருண்ஜெட்லி கூறினார்.

    English summary
    No one cheated like Congress says Finance Minister Arun Jaitley
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X