டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே பேச்சுதான்.. கோபம் அடைந்த அமித் ஷா.. திட்டி தீர்த்த நட்டா.. பிரக்யா தாக்கூருக்கு போன் மேல் போன்

கோட்ஸேவை தேச பக்திமான் என்று பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறிய கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சொந்த கட்சி எம்.பி மீது அதிரடி காட்டிய பாஜக

    டெல்லி:கோட்ஸேவை தேச பக்திமான் என்று பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறிய கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    நேற்று லோக்சபாவில் எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடந்தது. இதில் திமுக சார்பாக பேசிய எம்பி ஆ. ராசா, நாம் இங்கு கோட்ஸேவை நினைவு கூற வேண்டும். அவர் காந்தியை கொன்றதாக தானே ஒப்புக்கொண்டு இருக்கிறார். காந்தி மீது 37 வருடம் இருந்த காழ்புணர்ச்சி காரணமாக அவரை கொன்றேன் என்று ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்று ஆ. ராசா பேசினார்.

    இதற்கு எதிராக உடனடியாக பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் குறுக்கிட்டார். அதில், கோட்ஸே ஒரு தேச பக்திமான். நீங்கள் ஒரு தேச பக்திமானை பற்றி இங்கு எடுத்துக்காட்டு கொடுத்து பேச கூடாது. அது மிகவும் தவறு என்று குறிப்பிட்டார். இதனால் அவையில் பெரிய சர்ச்சை உருவானது.

    மகாராஷ்டிராவில் எல்லாம் ஓகே.. ஆனால் இந்த புதிருக்கு மட்டுமே விடை தெரியலையே.. என்ன நடக்குமோ!மகாராஷ்டிராவில் எல்லாம் ஓகே.. ஆனால் இந்த புதிருக்கு மட்டுமே விடை தெரியலையே.. என்ன நடக்குமோ!

    கடும் கோபம்

    கடும் கோபம்

    பிரக்யா தாக்கூரின் இந்த பேச்சு பாஜக தலைவர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. முதலில் பாஜகவை சேர்ந்த மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இது பற்றி விளக்கம் அளித்து பார்த்தார். அதில், பிரக்யா தாக்கூர் கோட்ஸேவை தேசபக்திமான் என்று சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை. அவரின் மைக் அப்போது ஆன் செய்யப்படவில்லை. சுதந்திர போராட்ட வீரர் உத்தம் சிங் குறித்து பேசிய போதுதான் அவர் பதில் அளித்தார் என்று குறிப்பிட்டு பார்த்தார்.

    ஆதாரம்

    ஆதாரம்

    ஆனால் பிரக்யா கூறிய இந்த கருத்து அதற்குள் வீடியோ ஆதாரங்களுடன் வெளியே வந்தது. இதனால் பாஜக தலைவர்கள் பிரக்யாவிற்கு ஆதரவாக பேசுவதை நிறுத்திவிட்டு தொடர்ந்து அவருக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினார்கள். இணையத்திலும் பிரக்யாவிற்கு எதிராக நிறைய டேக்குகள் வைரல் ஆனது.

    இமேஜ் போகும்

    இமேஜ் போகும்

    இப்போதுதான் மகாராஷ்டிரா பிரச்சனை காரணமாக பாஜக தனக்கு இருந்த இமேஜை கொஞ்சம் இழந்துள்ளது. தற்போது பிரக்யா காரணமாக இன்னும் பாஜக இமேஜை இழக்கும் நிலைக்கு சென்று இருக்கிறது. இதையடுத்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் நேற்று பிரக்யாவிற்கு போன் செய்து கண்டித்து இருக்கிறார்கள்.

    சர்ச்சைக்குரிய கருத்து

    சர்ச்சைக்குரிய கருத்து

    நீங்கள் பாராளுமன்றத்தில் இது போல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூற வேண்டாம். இது தேர்தல் பிரச்சாரம் கிடையாது. நீங்கள் பேசுவது எல்லாம் பதிவாகும் என்று பிரக்யாவிற்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் பிரக்யாவிடம் இது தொடர்பாக கோபத்துடன் பேசி இருக்கிறார்.

    தலைவர் கண்டனமும்

    தலைவர் கண்டனமும்

    இன்று இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா, பாஜக பிரக்யாவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது. அவரை இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து நீக்குகிறோம் என்று குறிப்பிட்டார். இந்த பிரச்சனையால் நேற்றே சபாநாயகர் ஓம் பிர்லா, பிரக்யாவின் பேச்சை, அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.

    கடுமையாக கண்டிப்பு

    கடுமையாக கண்டிப்பு

    அதேபோல் மிக முக்கியமாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இவரின் பேச்சை மிக கடுமையாக கண்டித்துள்ளார். பிரக்யா தாக்கூர் பேசியது தவறு. கோட்ஸே என்றுமே தேச பக்திமான் ஆக முடியாது என்று குறிப்பிட்டார். இதனால் கட்சி ரீதியாக விரைவில் பிரக்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

    English summary
    Pragya remark on Godse sparks a huge fire inside the BJP party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X