டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோட்சே விவகாரம்: பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழுவில் இருந்து சாத்வி பிரக்யா நீக்கப்படுகிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சொந்த கட்சி எம்.பி மீது அதிரடி காட்டிய பாஜக

    டெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என நாடாளுமன்றத்தில் புகழ்ந்ததால் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யாசிங் பாதுகாப்பு நாடாளுமன்ற நிலைக் குழுவில் இருந்து நீக்கப்படுவார் என அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    லோக்சபாவில் நேற்று திமுக எம்.பி. ஆ. ராசா, எஸ்பிஜி சட்ட திருத்தம் மீதான விவாதத்தின் போது மகாத்மா காந்தி கொலை வழக்கில் கொலையாளி நாதுராம் கோட்சே அளித்த வாக்குமூலத்தை சுட்டிக் காட்டி பேசினார். அப்போது குறுக்கிட்ட சாத்வி பிரக்யாசிங், கோட்சேவை தேசபக்தர் என்றார்.

    Pragya Singh Thakur will be removed from the committee of defence, says JP Natta

    இது மிகப் பெரும் சர்ச்சையானது. பொதுக் கூட்டங்களில் கோட்சேவை புகழ்வதை வழக்கமாக வைத்திருக்கும் பிரக்யாசிங், நாடாளுமன்றத்திலும் அதேபோல் பேசியது பெரும் சர்ச்சையானது. அவரது பேச்சு சபை குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டது.

    வெட்கம் கெட்ட செயல்.. சோனியா காந்தி கடும் கோபம்.. காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஆவேச உரை வெட்கம் கெட்ட செயல்.. சோனியா காந்தி கடும் கோபம்.. காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஆவேச உரை

    இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா, சாத்வி பிரக்யாசிங்கின் பேச்சு கண்டனத்துக்குரியது. அவரை பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற கருத்துகளையோ தத்துவங்களையோ பாஜக ஒரு போதும் ஆதரிக்காது. மேலும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக குழு கூட்டங்களில் அவர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    English summary
    BJP Working President J P Nadda said that We have decided that Pragya Singh Thakur will be removed from the consultative committee of defence, and in this session she will not be allowed to participate in the parliamentary party meetings.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X