டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருந்த வேண்டும்.. விடாமல் அமளி செய்த எதிர்க்கட்சிகள்.. மீண்டும் மன்னிப்பு கேட்ட பிரக்யா தாக்கூர்!

கோட்ஸே குறித்த தன்னுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்கு பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் மீண்டும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.. பிரக்யா | Pragya Thakur clarifies her stand on Godse

    டெல்லி: கோட்ஸே குறித்த தன்னுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்கு பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் மீண்டும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

    லோக்சபாவில் இரண்டு நாட்கள் முன் பேசிய பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், கோட்ஸே ஒரு தேச பக்திமான். நீங்கள் ஒரு தேச பக்திமானை பற்றி இங்கு எடுத்துக்காட்டு கொடுத்து பேச கூடாது. அது மிகவும் தவறு என்று குறிப்பிட்டார். இதனால் அவையில் பெரிய சர்ச்சை உருவானது.

    Pragya Thakur gives a one more unconditional apology for her stand on Godse

    இந்திய அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக இது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் இன்று மக்களவையில் பிரக்யா தாக்கூர் கோட்சே குறித்த தன்னுடைய கருத்துக்கு விளக்கம் கொடுத்தார். அதில், நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

    நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக தவறாக திரிக்கப்பட்டுள்ளது. இதனால் யாராவது புண்பட்டு இருந்தால், நான் அதற்காக மன்னிப்பு கோருகிறேன், என்று குறிப்பிட்டார்.

    ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரக்யா தாக்கூரின் மன்னிப்பை ஏற்கவில்லை. அவர் தான் எதுவும் பேசவில்லை என்று மீண்டும் வாதம் வைக்கிறார். இதை எல்லாம் ஏற்க முடியாது. பிரக்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தான் பேசியது தவறு என்று கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதனால் அவையில் பெரிய கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கி பல கட்சி எம்பிக்கள் கடுமையாக இது தொடர்பாக கூச்சல் எழுப்பினார்கள்.இதனால் அவை சில நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

    மன்னிப்பு கோருகிறேன்.. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.. பிரக்யா தாக்கூர் பரபரப்பு! மன்னிப்பு கோருகிறேன்.. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.. பிரக்யா தாக்கூர் பரபரப்பு!

    அதன்பின் அவையில் அனைத்து கட்சி அவை தலைவர்கள் உடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். இந்த பிரச்சனையை எப்படி முடிவிற்கு கொண்டு வருவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்தனர். அதில் லோக்சபாவில் இருந்து பிரக்யாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் லோக்சபா கூட்டப்பட்டது. அப்போது அவைக்கு வந்த பிரக்யா, நான் பேசியது மூலம் யாருக்காவது மனம் புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும். நான் கோட்ஸே பெயரை அவையில் உச்சரிக்கவே இல்லை. ஆனாலும் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன், என்று பிரக்யா குறிப்பிட்டார்.

    இதையடுத்து அவையில் பேசிய சபாநாயகர், இந்த பிரச்சனையை இதோடு முடியுங்கள். இதற்கு மேல் இதை பேசி அவை பணிகளை ஒத்திவைக்க வேண்டாம். அனைத்து கட்சியும் இதில் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    English summary
    Pragya Thakur gives a one more unconditional apology for her stand on Godse in LS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X