டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீட்டுக்காக வாக்குவாதம் செய்த பாஜக எம்பி பிரக்யா தாகூர்... ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த பயணி

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் வகுப்பும் இல்லை வசதியும் இல்லை - பாஜக எம்.பி. பிரக்யா

    டெல்லி: தான் முன்பதிவு செய்த இருக்கையில் ஊனமுற்றவர் அமர வைக்கப்பட்டதால் கடும் ஆத்திரம் அடைந்த பாஜக எம்பி பிரக்யா தாகூர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் விமான பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

    காந்தியை கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாக பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை கூறி இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் போபால் நகர எம்பி பிரக்யா தாகூர். பாஜகவைச் சேர்ந்த பெண் எம்பியான இவர், அண்மையில் டெல்லியில் இருந்து போபால் நகருக்கு ஸ்பெஸ்ஜெட் விமானத்தில் முன் பதிவு செய்திருந்தார்.

    விமானத்தில் ஏறிய பிரக்யா தாகூர் தான் முன்பதிவு செய்திருந்த சீட்டில் வேறு ஒருவர் அமர்ந்திருப்பதை பார்த்து கோபம் அடைந்தார். இது தனக்கான சீட் என்று அவர் அப்போது கேட்டிருக்கிறார்.

    ஊழியர்கள் விளக்கம்

    ஊழியர்கள் விளக்கம்

    அப்போது விமான ஊழியர்கள், ஊனமுற்றோர் யாரேனும் வந்தால் அவசர கால ஜன்னல் அருகே அமரவைக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் ஊனமுற்றோரான அவரை அமரவைத்துள்ளோம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

    கடும் வாக்குவாதம்

    இதை முதலில் ஏற்க மறுத்து கடும் கோபம் அடைந்த அவர் கோபப்பட்டு வாக்குவாதம்செய்தார்.பதிலுக்கு பயணிகளும் அவருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது பேசிய பயணி, நீங்கள் மக்கள் பிரதிநிதி. நீங்கள் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. உங்களால் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்பட்டால் அதற்கு நீங்கள் தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.நீங்கள் ஒரு அரசியல் தலைவராக இருந்தபோதிலும் 50 பேரை காப்பாற்றக்கூடிய மக்களின் வரிப்பணத்தில் இப்போது பயணிக்கிறீர்கள் என்று பயணி ஒருவர் சொல்கிறார்.

    திறன் இல்லையா

    திறன் இல்லையா

    இதற்கு முன்னதாக பிரக்யா தாகூர் விமான பணிப்பெண்களிடம் இந்த பிரச்சனையை நீங்கள் தான் தீர்க்க வேண்டும். அதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது. யாருடைய நேரத்திற்கும் எந்த மதிப்பும் இல்லையா? இது குறித்து நீங்கள் ஏன் ஒரு முடிவை எடுக்கவில்லை? இங்கு தொழில் திறனுடைய விமான பணிப்பெண்கள் இல்லையா என்று கூறுகிறார்.

    பர்ஸ்ட் கிளாஸில்

    பர்ஸ்ட் கிளாஸில்

    அதைத்தொடர்ந்து சக பயணிகளுடனான வாக்குவாதத்திற்கு பிறகு ஆவண ஆதாரங்களை காட்டினால் இருக்கையை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக கூறினார். அவசர கால வழி அருகே ஊனமுற்றோரை அமரவைப்பதற்காக விதிகள் உள்ளதா என்பதை உங்கள் விமான நிறுவனத்தின் புத்தகத்தில் காட்டுங்கள். பர்ஸ்ட் கிளாஸில் செல்ல உரிமை உள்ளது என்றாலும் நான் தான் எக்கனாமிக் சீட்டில் செல்ல ஒப்புக்கொண்டேன்" என்கிறார் பிரக்யா தாகூர்.

    English summary
    Pragya Thakur mp annoyed over not being allowed to sit on a pre-allotted seat due to rules that forbid wheelchair-bound passengers from occupying the emergency row.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X