டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூர்தர்ஷனில் ராமாயணம் பார்த்ததோட விட்டிருக்கலாம்.. விமர்சனத்தில் சிக்கிய பிரகாஷ் ஜவடேக்கர்

Google Oneindia Tamil News

டெல்லி: பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த மக்களை 21 நாட்களாக லாக்டவுன் என்று சொல்லி வீட்டுக்குள் வைத்தாலும் வைத்தார்கள், அனைவரும் 90sdays சுக்கு திரும்பிப் போக வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது.

சீரியல்களின் ஷூட்டிங் நடைபெறாத காரணத்தால், தொலைக்காட்சி சேனல்கள் பலவும் சீரியல்களை நிறுத்திவிட்டு தங்களிடம் கையிருப்பு உள்ள திரைப்படங்களை திரும்பத் திரும்ப போட ஆரம்பித்துவிட்டனர்.

Prakash Javdekar getting troll from netizens over watching Ramayanam serial

குடும்பத்தோடு, உட்கார்ந்து இதுபோன்ற படங்களை பார்ப்பதைவிட, தங்களது இளம் வயதில் பார்த்த பழைய தொலைக்காட்சி தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று 80ஸ், 90ஸ் கிட்சுகள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர்.

இதை பரிசீலித்த தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயண இதிகாச தொடரை மறுபடியும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரசார் பாரதி அனுமதியை தொடர்ந்து, ராமாயணம் தொடர் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரையும், பிறகு இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ஒளிபரப்பப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.

இதன்படி என்று ராமாயணம் சீரியலின் முதல் அத்தியாயம் தொடங்கியது. இதை தனது வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்து வருவதாக கூறி பிரகாஷ் ஜவடேகர் ஒரு படத்தை டுவிட்டரில் வெளியிட்டார். அவ்வளவுதான் தாமதம்.. நெட்டிசன்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவை உலுக்கி வரும் நிலையில், ஒரு அமைச்சர் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டு இருப்பது சரியாகுமா என்ற தொனியில் கேள்விகளில் ஆரம்பித்தன.

அதிலும், குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக நடந்து செல்லக்கூடிய காட்சிகளை புகைப்படமாக எடுத்து, அதை ஜவடேகரின் பின்னூட்டமாக போட ஆரம்பித்தனர். இந்த நிலையில் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார் பிரகாஷ் ஜவடேகர்.

பின்னர், மற்றொரு ட்வீட்டில், வீடே, அலுவலகமாக மாறிவிட்டது. லாக்டவுன் காலகட்டமான இந்த நேரத்தில், என்னுடைய அமைச்சகத்தின் அதிகாரிகளை வீட்டிலிருந்தபடி தொடர்பு கொண்டும் ஒருங்கிணைத்தபடியும் இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் விமர்சனத்தை தொடங்கியதும்தான், பணியாற்றிக் கொண்டிருக்கும் கூடிய புகைப்படத்தை, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அவர்களுக்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார் பிரகாஷ் ஜவடேகர்.

English summary
Home has become office ! Connecting and coordinating with Officers of my Ministries for facilitation during the lockdown, says PrakashJavdekar after netizens troll him over watching Ramayanam serial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X